உலகின் டாப் வல்லரசு நாடுகளில் ஒன்றான பிரிட்டன் நாட்டில் ஏப்ரல் மாதத்தில் 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு நுகர்வோர் விலைகள் உயர்ந்தது.
இந்த அதிகப்படியான விலைவாசிக்கு முக்கியக் காரணமாக எரிபொருள் மற்றும் உணவுப் பொருட்களின் விலை உயர்வு எனக் கூறப்படும் நிலையில் அந்நாட்டு மக்கள் மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டு உள்ளனர்.
எரிபொருள், உணவு பொருட்கள் என அனைத்து பொருட்களின் விலை உயர்ந்துள்ளதால் பிரிட்டன் நாட்டில் மக்கள் தினசரி வாழ்க்கையை நடத்துவதற்கே தடுமாறி வருகின்றனர். இந்நிலையில் Lloyds வங்கி முக்கியமான அறிவிப்பை வெளியிட்டு உள்ளது.
Lloyds வங்கி
Lloyds வங்கியில் பணியாற்றும் சுமார் 64,000 ஊழியர்களுக்கு அந்நாட்டில் அதிகரித்துள்ள விலை உயர்வைச் சமாளிக்க 1000 பவுண்ட் தொகையைப் போனஸாக அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு ஊழியர்கள் மத்தியில் அதிகப்படியான வரவேற்பைப் பெற்று ஆனந்தக் கண்ணீர் விட்டனர்.
1000 பவுண்ட் போனஸ்
பிரிட்டன் நாட்டின் விலைவாசி உயர்வு Lloyds வங்கியில் குறைவான சம்பளத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்குக் கட்டாயம் உதவி செய்ய வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டது. இவ்வங்கி ஊழியர்களுக்காக யுனைட் போராட்டம் நடத்தியது குறிப்பிடத்தக்கது.
யுனைட் உறுப்பினர்கள்
யுனைட் உறுப்பினர்களின் கூட்டு நடவடிக்கையின் அடிப்படையில் முன் வரிசையில் உள்ள ஊழியர்கள் இந்த விலைவாசி உயர்வில் அதிகளவிலான பாதிப்பை எதிர்கொள்ளும் நிலையில் அவர்களுக்கு உதவும் வகையில் நிதியுதவி அளிக்கப்பட்டு உள்ளது என யுனைட் அமைப்பின் பொதுச் செயலாளர் ஷரோன் கிரஹாம் கூறினார்.
எரிபொருள் மற்றும் எரிசக்தி
பிரிட்டன் நாட்டில் அதிக எரிபொருள் மற்றும் எரிசக்தி செலவுகள் காரணமாக, அந்நாட்டுக் குடும்பங்களின் நிதிநிலை கடுமையாகப் பாதிப்பு ஏற்படுத்துவதால், இங்கிலாந்தில் விலைவாசி 40 ஆண்டு உச்சத்திற்குச் சென்றுள்ளது.
நுகர்வோர் பொருட்கள்
நுகர்வோர் பொருட்களின் விலைகள் உயரும் விகிதம் அதாவது பணவீக்கம் பிரிட்டன் நாட்டில் 9 சதவீதமாக உள்ளது, மேலும் 2022 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் பிரிட்டன் நாட்டின் பணவீக்கம் மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ரெசிஷன்
இதன் மூலம் இந்த ஆண்டின் பிற்பகுதியில் பிரிட்டன் நாட்டின் பொருளாதாரம் மந்த நிலைக்குள் அதாவது ரெசிஷனுக்குள் தள்ளும் நிலை உருவாகியுள்ளது. இந்த நிலைக்குச் செல்லக்கூடாது என்பதற்காகப் பல முயற்சிகள் எடுத்து வருகிறது, ஆனால் தொடர்ந்து அதிகரித்து வரும் கச்சா எண்ணெய் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
UK Based Lloyds Bank announced 1000 pound bonus to help with cost of living hike
UK Based Lloyds Bank announced 1000 pound bonus to help with cost of living hike ‘இந்த’ மனது தான் கடவுள்.. பிரிட்டன் நிறுவன செயலால் ஊழியர்கள் ஆனந்த கண்ணீர்..!