இரத்த ஆறு, அமில மழை, புற்றுநோய், இருள் நிறைந்த ரஷ்ய நகரம்.. உலகப்போரை முன்னறிவிக்கும் கடவுளின் செய்தி


பூமியிலேயே, அதிக மன அழுத்தத்துடன் மக்கள் வாழும் ஒரு நகரைக் குறித்த ஒரு செய்தி வெளியாகியுள்ளது.

அந்த நகரம் ரஷ்யாவிலுள்ள Norilsk என்னும் நகரம்!
Norilsk நகருக்குச் செல்வதற்கு பாதைகளே கிடையாதாம். சரக்கு ரயில் போக்குவரத்துக்கான ஒரே ஒரு ரயில் பாதை மட்டுமே அந்நகரைக் கடந்து செல்கிறதாம்.

கடல் வழியும் குளிர்காலத்தில் உறைந்துவிட, தனித்துவிடப்பட்டுள்ளார்கள் அந்நகரில் வாழும் 170,000 குடிமக்கள்.
20ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் நிலவியல் நிபுணர் ஒருவர் அந்நகரில் நிக்கல், தாமிரம் மற்றும் கோபால்ட் ஆகிய தனிமங்கள் கிடைப்பதைக் கண்டறிய, இன்று உலகின் நிக்கல் தேவையில், ஐந்தில் ஒரு பங்கு Norilsk நகரிலிருந்துதான் வருகிறது.

ஆனால், அதற்காக 500,000 பேர் கட்டாயப்பணியாளர்களாக பாடுபட்டிருக்கிறார்கள், 18,000 பேர் உயிரைக் கொடுத்திருக்கிறார்கள்.
அதன் இன்னொரு பாதக விளைவு, இன்று, ரஷ்யாவிலேயே அதிக மாசு நிறைந்த நகரம் Norilskதான்.
இந்த நிக்கல் ஆலைகளிலிருந்து வெளியாகும் நச்சு வாயுக்கள் காற்றை மாசுபடுத்துவதுடன், அமில மழை பெய்வதற்கும் காரணமாக அமைந்துள்ளன.

இரத்த ஆறு, அமில மழை, புற்றுநோய், இருள் நிறைந்த ரஷ்ய நகரம்.. உலகப்போரை முன்னறிவிக்கும் கடவுளின் செய்தி

Image Credit: AFP

இந்த அமில மழையால் மக்கள் மட்டுமல்ல, மரங்களும் பாதிப்புக்குள்ளாகிவிட்டன.
இப்பகுதி மக்கள் சராசரியாக அதிகபட்சம் 59 வயதுவரைதான் வாழ்கிறார்கள். அதிக அளவில் புற்றுநோய் உட்பட பல பிரச்சினைகளும் இங்கு காணப்படுகின்றன.

2016ஆம் ஆண்டு, செப்டம்பர் மாதம், இந்நகருக்கு அருகிலுள்ள Daldykan நதி, திடீரென இரத்தச் சிவப்பாக மாற, மக்கள் திகிலடைந்திருக்கிறார்கள்.
எதனால் அந்நதி அப்படி மாறியது என்பது தெரியாத நிலையில், உள்ளூர் மக்களோ, நெருங்கி வரும் உலகப்போரை முன்னறிவிக்கும் கடவுளின் செய்தி அது என்று கூறியிருக்கிறார்கள். குளிர்காலத்தில் பனி கூட சிவப்பு நிறமாகிவிடுகிறதாம்.

அப்பகுதியில் அமைந்துள்ள தாதுக்களை பிரித்தெடுக்கும் உருக்காலை ஒன்றிலிருந்து வெளியேறும் கழிவுகள் இதற்கு காரணமாக இருக்கலாம் என்னும் ஒரு கருத்தும் நிலவுகிறது.
இதற்கிடையில், 2020ஆம் ஆண்டு ஜூன் மாதம் 3ஆம் திகதி, Norilsk நகருக்கு வெளியே அமைந்துள்ள மற்றொரு நதி திடீரென இரத்தச் சிவப்பாக மாற, மீண்டும் மக்கள் திகிலடைந்திருக்கிறார்கள்.

இம்முறை, நிக்கல் ஆலை ஒன்றின் உப ஆலை ஒன்றிலிருந்து 20,000 டன் டீசல் சிந்தியதால் நதி சிவப்பாக மாறியிருக்கிறது.
இன்னொரு பக்கம், இந்நகரம் ஆர்க்டிக் பகுதியில் அமைந்திருப்பதால், வருடத்தில் 45 நாட்கள் நகரம் தொடர்ந்து இருளில் காணப்படுகிறது.

இரத்த ஆறு, அமில மழை, புற்றுநோய், இருள் நிறைந்த ரஷ்ய நகரம்.. உலகப்போரை முன்னறிவிக்கும் கடவுளின் செய்தி

Image Credit: Instagram

இப்படி சூரிய ஒளியே இல்லாமல் இருப்பதால், மக்கள் polar T3 syndrome என்னும் மன அழுத்தப் பிரச்சினைக்கு ஆளாகிறார்கள். மறதி, மன நிலையில் மாற்றம் கவனம் செலுத்தமுடியாமை என பல பிரச்சினைகள் ஏற்பட, பூமியிலேயே, அதிக மன அழுத்தத்தை ஏற்படுத்தும் ஒரு நகர் என்ற பெயரைப் பெற்றுள்ளது Norilsk நகரம்.
இப்படி தன் சொந்த நாட்டு மக்கள் அவதியுற்றுக்கொண்டிருக்கும் நிலையில், அதை சரி செய்ய எந்த நடவடிக்கையும் எடுக்காமல், உக்ரைனை விடுவிக்க போர் செய்கிறாராம் ஜனாதிபதி புடின்!

இரத்த ஆறு, அமில மழை, புற்றுநோய், இருள் நிறைந்த ரஷ்ய நகரம்.. உலகப்போரை முன்னறிவிக்கும் கடவுளின் செய்தி

Image Credit: Reuters



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.