பிரித்தானிய பெண் ஒருவர், இரவு நேரத்தில் திடீரென தனது வீட்டின் முன் அமெரிக்கர்கள் சிலர் கூடியதால் குழப்பமடைந்தார்.
ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் வாழ்ந்து வருபவர் Lanna Tolland.
தனது வீட்டினுள் சோபாவில் அமர்ந்தவண்ணம் ரிலாக்ஸ் செய்துகொண்டிருந்த Lanna, திடீரென சில அமெரிக்கர்கள் அவரது வீட்டுத் தோட்டத்துக்குள் நுழைவதைக் கண்டுள்ளார்.
Lannaவைப் பார்த்து கையசைத்த அவர்கள், அந்த வீட்டின் முன் நின்று புகைப்படங்கள் எடுக்கத் துவங்கியுள்ளார்கள்.
இரவு 10.30 மணிக்கு யாரோ சிலர் திடீரென தன் வீட்டின் முன் கூடியதைத் தொடர்ந்து, ஜன்னலைத் திறந்த Lanna, அவர்களிடம், இங்கே என்ன செய்கிறீர்கள் என்று கேட்டிருக்கிறார்.
அப்போது அந்த அமெரிக்கர்கள், இந்த வீடு எங்கள் மூதாதையர்களுக்குச் சொந்தமானதாக இருந்தது, அவர்கள் இங்கு வாழ்ந்திருக்கிறார்கள். ஆகவே, அவர்கள் நினைவாக இந்த வீட்டைச் சுற்றிப் பார்த்துவிட்டு, வீட்டின் முன் நின்று புகைப்படம் எடுத்துக்கொள்கிறோம் என்றார்களாம்.
Lanna தான் அந்த அமெரிக்கர்களை எடுத்த புகைப்படங்களுடன் இந்த செய்தியை சமூக ஊடகம் ஒன்றில் பதிவிட, அது வைரலாகியிருக்கிறது.
Credit: Twitter
Credit: Twitter