உங்க இஷ்டத்துக்கு வாங்குவிங்களா? ஸ்விக்கி, சோமேட்டோ 15 நாள் கெடு.. கிடுக்கிப்பிடி போட்ட மத்திய அரசு

தற்போதைய டெக்னாலஜி காலத்தில் அனைவரும் ஆன்லைனில் ஆர்டர் செய்வதை விரும்புகின்றனர் என்பதும், உணவுப் பொருள்கள் முதல் எலக்ட்ரானிக் பொருட்கள் வரை மக்கள் ஆன்லைன் மூலம் தான் பெற்று வருகின்றனர் என்பதையும் பார்த்து வருகிறோம்.

ஆனால் அதே நேரத்தில் ஆன்லைன் மூலம் விற்பனை செய்யும் நிறுவனங்கள் டெலிவரி சார்ஜ் உள்பட பல்வேறு மறைமுக சார்ஜ்களை நுகர்வோர் மீது சுமத்தி வருவதாக புகார் எழுந்துள்ளது.

இதுகுறித்து மத்திய அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஸ்விக்கி டெலிவரிபாய் டூ வெப் டெவலப்பர்: ஒரு இளைஞரின் வெற்றி பயணம்!

ஸ்விக்கி - ஜொமைட்டோ

ஸ்விக்கி – ஜொமைட்டோ

ஸ்விக்கி மற்றும் ஜொமைட்டோ போன்ற ஆன்லைன் நிறுவனங்கள் மீது எழுந்த புகாரின் அடிப்படையில் நேற்று நுகர்வோர் விவகாரங்கள் செயலர் ரோகித் குமார் சிங் அவர்கள் தலைமையில் கூட்டம் நடைபெற்றது.

வழிகாட்டு நெறிமுறைகள்

வழிகாட்டு நெறிமுறைகள்

இந்த கூட்டத்தில் சில வழிகாட்டு நெறிமுறைகள் ஸ்விக்கி மற்றும் ஜொமைட்டோ உள்ளிட்ட ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டது. கடந்த 12 மாதங்களில் ஸ்விக்கி மற்றும் ஜொமைட்டோ நிறுவனங்கள் மீது ஆயிரக்கணக்கான புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் இந்த நிறுவனங்கள் டெலிவரி மற்றும் பேக்கேஜிங் கட்டணத்தின் உண்மைத்தன்மையை நுகர்வோர்களுக்கு வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது.

வெளிப்படை
 

வெளிப்படை

ஆர்டர் செய்யப்படும் உணவு பொருளின் விலையை நிர்ணயம் செய்வது ஒரு ஓட்டலின் உரிமை என்றால் அந்த விலை என்ன என்பதை நுகர்வோருக்கு வெளிப்படையாக காண்பிக்க வேண்டிய கடமை ஆன்லைன் டெலிவரி நிறுவனங்களுக்கு உண்டு என்றும் இந்தக் கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டது.

பேக்கிங் கட்டணம்

பேக்கிங் கட்டணம்

மேலும் ஒரு குறிப்பிட்ட உணவுக்கு பேக்கிங் மற்றும் டெலிவரி கட்டணமும் ஒரு குறிப்பிட்ட அளவில் தான் இருக்க வேண்டும் என்றும் ஒவ்வொரு பொருளுக்கும் பேக்கிங் மற்றும் டெலிவரி கட்டணங்கள் வசூலிக்கப்படுகின்றனவா? என்பதை நுகர்வோருக்கு தெரிவிக்க வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

புகார்கள்

புகார்கள்

ஓட்டலில் குறிப்பிட்டுள்ள உணவு பொருட்களுக்கான உணவுப்பட்டியலுக்கும் இ-காமர்ஸ் நிறுவனங்களின் உணவுப்பட்டியலுக்கும் இடையே பெரிய வித்தியாசம் உள்ளதாக புகார் எழுந்ததை அடுத்து இ-காமர்ஸ் நிறுவனங்கள் இந்த புகார்கள் மீது எந்தவிதமான பதிலும் அளிக்காமல் இருப்பதாக மத்திய நுகர்வோர் துறை அமைச்சகம் இ-காமர்ஸ் நிறுவனங்களுக்கு சுட்டிக்காட்டியுள்ளது.

நுகர்வோர்

நுகர்வோர்

நுகர்வோர்களின் கேள்விகளுக்கும் புகார்களும் இ-காமர்ஸ் நிறுவனங்கள் பதில் சொல்ல வேண்டியது முக்கியம் என்றும், நுகர்வோர்களின் குறைகளை எப்படி நிறுவனங்கள் தீர்க்க போகின்றன என்பதை விளக்க வேண்டும் என்றும் இந்த கூட்டத்தில் நுகர்வோர் துறை அமைச்சகம் விளக்கியுள்ளது.

நோட்டீஸ்

நோட்டீஸ்

மேலும் ஒருசில இ-காமர்ஸ் நிறுவனங்கள் மீதான புகார் குறித்து மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக வெளிவந்திருக்கும் செய்தி உணவுப் பொருட்களை வாங்கும் நுகர்வோருக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

15 நாட்கள்

15 நாட்கள்

ஆன்லைன் டெலிவரி நிறுவனங்கள் மீது எழுப்பப்படும் புகார்களுக்கு 15 நாட்களில் தீர்வு காணப்பட வேண்டும் என்று இ-காமர்ஸ் நிறுவனங்களுக்கு நுகர்வோர் விவகார துறை அறிவுறுத்தியுள்ளது.

சேவைக்கட்டணம்

சேவைக்கட்டணம்

கடந்த சில மாதங்களாக நுகர்வோரின் நலனை பாதுகாப்பதற்காக நுகர்வோர் துறை பல்வேறு நடவடிக்கை எடுத்துள்ளது என்பதும் உணவகங்களில் சேவை கட்டணங்கள் வலுக்கட்டாயமாக பெறக்கூடாது என்று உணவகங்களை கேட்டுக் கொண்டது என்பதும் ஹோட்டலில் உணவு சாப்பிடுபவர்கள் சேவை கட்டணம் செலுத்த வேண்டிய அவசியமில்லை என்பதை அறிவுறுத்தியது என்பதை ஏற்கனவே பார்த்தோம். மத்திய அரசின் இந்த ஆக்கபூர்வமான நடவடிக்கைகளால் இ-காமர்ஸ் நிறுவனங்களை பயன்படுத்தும் நுகர்வோர்கள் தற்போது மகிழ்ச்சி அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Govt asks Swiggy, Zomato to submit plans for improving complaint redressal

Govt asks Swiggy, Zomato to submit plans for improving complaint redressal | உங்க இஷ்டத்துக்கு வாங்குவிங்களா? ஸ்விக்கி, ஜொமைட்டாவுக்கு கிடுக்கிப்பிடி போட்ட மத்திய அரசு

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.