உயிர் காக்கும் சிகிச்சையை நிறுத்துங்கள்: நீதிமன்ற தீர்ப்பால் உடைந்துபோன 12 வயது சிறுவனின் தாய்!


மூளை பாதிக்கப்பட்ட ஆர்ச்சி பேட்டர்ஸ்பீ(12) என்ற சிறுவனுக்கு, மூளை தண்டு இறந்துவிட்டதால் அவருக்கு வழங்கப்பட்டு வந்த உயிர் ஆதரவு சிகிச்சையை நிறுத்தலாம் என பிரித்தானிய நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

பிரித்தானியாவின், எசெக்ஸின் சவுத்ஹெண்டில் உள்ள வீட்டில் ஆர்ச்சி பேட்டர்ஸ்பீக்கு (12) விபத்தில் ஏற்பட்டத்தை தொடர்ந்து பலத்த காயமடைந்தார், அவர் கிழக்கு லண்டனின் வைட்சேப்பலில் உள்ள ராயல் லண்டன் மருத்துவமனையில் குழந்தைக்கு சிகிச்சை பிரிவில் கடந்த ஏப்ரல் மாதம் அனுமதிக்கப்பட்டார்.

இருப்பினும் சிகிச்சை குறிப்பிட்ட அளவிற்கு பலனளிக்காததை தொடர்ந்து, அவருக்கான உயிர் ஆதரவு சிகிச்சையை முடிக்க வேண்டும் என்றும் அந்த இளைஞரை வென்டிலேட்டரில் இருந்து துண்டிக்க வேண்டும் என்றும் மருத்துவமனை நிர்வாகம் கேட்டுக்கொண்டது.

உயிர் காக்கும் சிகிச்சையை நிறுத்துங்கள்: நீதிமன்ற தீர்ப்பால் உடைந்துபோன 12 வயது சிறுவனின் தாய்!

ஆனால் அவரது பெற்றோர்களான ஹோலி டான்ஸ் மற்றும் பால் பேட்டர்ஸ்பீ ஆகியோர் ஆர்ச்சி பேட்டர்ஸ்பீ வழங்கப்பட்ட சிகிச்சையை தொடர விரும்புவதாக தெரிவித்ததுடன், தனது மகனின் இதயம் இன்னும் துடிக்கிறது, அவன் அவரது தாயின் கையைப் பிடித்தார் என தெரிவித்து வந்தனர்.

இதனைத் தொடர்ந்து மருத்துவமனையை ஆளும் அறக்கட்டளையான பார்ட்ஸ் ஹெல்த் NHS நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இதுதொடர்பான வழக்கு விசாரனை இன்று நீதிமன்றத்தில் வந்தநிலையில், சிறுவனுக்கு, மூளை தண்டு இறந்துவிட்டதால் அவருக்கு வழங்கப்பட்டு வந்த உயிர் ஆதரவு சிகிச்சையை நிறுத்தலாம் என பிரித்தானிய நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

இதுகுறித்து நீதிபதி வழங்கிய எழுத்துப்பூர்வ தீர்ப்பில், எம்.ஆர்.ஐ ஸ்கேன்களுக்கு பிறகு 31, மே 2022 திகதி நண்பகல் ஆர்ச்சி இறந்ததை நான் உறுதி செய்தேன் என்று தெரிவித்தார்.

உயிர் காக்கும் சிகிச்சையை நிறுத்துங்கள்: நீதிமன்ற தீர்ப்பால் உடைந்துபோன 12 வயது சிறுவனின் தாய்!

அத்துடன் ராயல் லண்டன் மருத்துவமனையில் உள்ள மருத்துவ நிபுணர்களுக்கு ஆர்ச்சி பேட்டர்ஸ்பீயை இயந்திரத்தனமாக காற்றோட்டம் செய்வதை நிறுத்த நான் அனுமதி அளிக்கிறேன் என உத்திரவிட்டார்.

இந்தநிலையில், தீர்ப்பு குறித்து நீதிமன்றத்திற்கு வெளியே பேசிய ஆர்ச்சியின் தாயார் திருமதி டான்ஸ், நீதிபதியின் தீர்ப்பால் “பேரழிவு மற்றும் மிகுந்த ஏமாற்றம் அடைந்ததாக” அடைந்ததாக தெரிவித்தார்.

உயிர் காக்கும் சிகிச்சையை நிறுத்துங்கள்: நீதிமன்ற தீர்ப்பால் உடைந்துபோன 12 வயது சிறுவனின் தாய்!

கூடுதல் செய்திகளுக்கு: ”சர்வதேச நீர்” என்று எதுவும் கிடையாது: ஐக்கிய நாடுகள் மாநாட்டில் சீனா பரபரப்பு!

மேலும் தனது மகனுக்கு போதுமான நேரம் கொடுக்கப்படவில்லை என்றும், அவன் இதயம் இன்னும் துடிக்கிறது, கடவுளின் வழி இருக்கும் வரை அவர் செல்வதை நான் ஏற்க மாட்டேன், நீதிபதியின் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய குடும்பத்தினர் உத்தேசித்துள்ளதாக திருமதி டான்ஸ் தெரிவித்தார். 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.