பெட்ரோல் டீசல் விலை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே இருக்கும் நிலையில் பெட்ரோல் டீசல் வாகனங்களுக்கு மாற்றாக எலக்ட்ரிக் வாகனங்கள் தற்போது வந்துகொண்டிருக்கின்றன.
சில மணி நேரம் சார்ஜ் செய்த எலக்ட்ரிக் வாகனங்களை பலமணி நேரக்கள் இயக்கலாம் என்ற நிலை தற்போது உள்ளது.
இந்த நிலையில் அடுத்த கட்டமாக சோலார் கார் உற்பத்தி செய்யப்பட உள்ளன என்ற தகவல் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பே வெளியானது. தற்போது அந்த கனவு நனவாகி உள்ளது.
டெபிட், கிரெடிட் பயன்படுத்துபவரா நீங்க.. ஜூலை 1 முதல் வரவிருக்கும் மாற்றத்தை தெரிந்து கொள்ளுங்க!
சோலார் கார்
நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த ஸ்டார்ட் அப் நிறுவனமான லைட்இயர் என்ற நிறுவனம் லைட்இயர் 0 என்ற உலகின் முதல் சோலார் கார் குறித்த தகவலை தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டு உள்ளது. ஆறு வருட அயராத உழைப்பின் விளைவாக உருவாக்கப்பட்டுள்ள இந்த கார்களை இந்த ஆண்டு இறுதி முதல் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்றும் அந்நிறுவனம் கூறியுள்ளது.
லைட்இயர் 0
லைட்இயர் 0 சோலார் காரின் மேற்கூரையில் 5 சதுர அடி அளவில் வளைந்த இரண்டு சோலார் பேனல்கள் உள்ளது என்பதால் இதன் மூலம் சூரிய ஒளியால் சார்ஜ் செய்துகொள்ளலாம். இந்த காரில் 60 கிலோ வாட் பவர் பேட்டரி மற்றும் நான்கு எலக்ட்ரிக் மோட்டார்கள் உள்ளன என்றும் இந்த கார் அதிகபட்சமாக 174 எச்பி பவரை வெளிப்படுத்தும் தன்மை உடையது என்றும் கூறப்படுகிறது.
ஏழு மாதங்கள்
இந்த காரை ஒரு முறை சூரிய ஒளி அதிகம் இருக்கும் நாடுகளில் முழுமையாக சார்ஜ் செய்தால் ஏழு மாதங்களுக்கு தினசரி சுமார் 35 கிலோ மீட்டர் ஓட்ட முடியும் என்று இதன் உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர். நெதர்லாந்து போன்ற மேகமூட்டமான நாடுகளில் கூட சராசரியாக ஒரு நாளைக்கு 35 கிலோ மீட்டர் பயணம் செய்தால் இரண்டு மாதங்கள் வரை இந்த காரை ஓட்டலாம் என்று கூறப்படுகிறது.
விலை எவ்வளவு?
174 குதிரைத்திறன், நான்கு மின்சார மோட்டார்களுடன் 60kWh பேட்டரி பேக் கொண்ட இந்த காரை மணிக்கு 100 மைல்கள் வேகத்தில் ஓட்டலாம். மேலும் 10 வினாடிகளில் மணிக்கு 62 மைல்கள் வேகத்தில் செல்லும் திறன் கொண்டது. இந்த காரின் விலை இந்திய மதிப்பில் சுமார் ரூ.2 கோடி அளவில் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
Lightyear 0: The world’s first production-ready solar car
Lightyear 0: The world’s first production-ready solar car | உலகின் முதல் சோலார் கார் லைட்-இயர் 0: சார்ஜ் இல்லாமல் பல மாதங்கள் ஓடுமா?