திருமணம் செய்துகொள்வதாக தன்னைப் போல் பல பெண்களை காதலித்து ஏமாற்றி பாலியல் வன்கொடுமை செய்ததாக காதலன் மீது காவல் ஆணையர் அலுவலகத்தில் பெண் ஒருவர் புகார் அளித்துள்ளார்.
சென்னையைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் தனது காதலன் தன்னைபோல் பல பெண்களை காதலித்து ஏமாற்றி உடலுறவு கொண்டதாகவும், தனது இச்சைக்கு இணங்க வேண்டும் எனக்கூறி பல வழிகளில் பாலியல் தொல்லைகள் கொடுத்ததாகவும், தற்போது மீண்டும் வேறொரு பெண்ணை வரும் 16 ஆம் தேதி திருமணம் செய்ய உள்ளதாகவும் சென்னை வேப்பேரியில் உள்ள காவல் ஆணையர் அலுவலகத்தில் பரபரப்பு புகார் அளித்துள்ளார்.
அந்த திருமணத்தை தடுத்து நிறுத்தி காதலன் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்தப் புகாரில் வலியுறுத்தியுள்ளார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”நான் திருமணமாகி 2016 ஆம் ஆண்டு விவாகரத்து பெற்றேன்.
சென்னை திருநின்றவூரில் வசித்து வரும் விக்ரம் வேதகிரி என்பவர், எனக்கு கடந்த 2020 ஆம் ஆண்டு முகநூல் மூலம் அறிமுகமானார். அவர், முதலில் எனது வேலை சார்ந்த விஷயங்களை பேசத் தொடங்கினார். இதையடுத்து எனக்கு திருமணமாகி விவாகரத்து பெற்றது உட்பட என் சொந்த விஷயங்கள் அனைத்தையும் தெரிந்துகொண்டார்.
இதையடுத்து கடந்த 2021 ஆம் ஆண்டு என்னை நேரில் சந்திக்கத் தொடங்கிய விக்ரம், என்னிடம் காதலை வெளிப்படுத்தினார். ஆனால், அவரது காதலை முதலில் மறுத்த நான், நாளடைவில் அவரின் நடவடிக்கைகளை ரசிக்கத் தொடங்கி காதலை ஒப்புக்கொண்டேன். ஆனால் அதை தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட அவர், என்னை அவரின் குடும்பத்தாருக்கு அறிமுகம் செய்துவைத்து, என்னை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகளைக் கூறி ரகசியமாக திருமணமும் செய்துகொண்டார்.
அதற்கு அவரது பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் வீட்டை விட்டு வெளியேறி எனது வீட்டில் வந்து தங்கியதுடன் ஊரறிய விரைவில் திருமணம் செய்துகொள்வதாகக் கூறி தன்னுடன் பலமுறை உடலுறவு வைத்துக் கொண்டதாகவும் அவர் தெரிவித்தார். இதையடுத்து அவர், தனது பாலியல் இச்சைகளை என் மீது திணித்து பல வழிகளில் எனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததார்.
அதற்கு நான் உடன்பட மறுத்தால் என்னை தாக்கினார். அதைத் தாங்க முடியாமல் ஒரு கட்டத்தில் நான் காவல்துறையை நாடியபோது விக்ரம் என்னை மன்னித்து விடுமாறு கூறி என்னை புகார் அளிக்கவிடாமல் தடுத்துவிட்டார். ஆனால், தொடர்ந்து விக்ரம் என்னை அவரது பாலியல் இச்சைகளுக்கு இணங்க வைத்ததை பொறுக்க முடியாமல் தட்டிக்கேட்டபோது, தன்னிடம் சொல்லாமல் எனது லேப்டாப்-ஐ உடன் தலைமறைவாகி விட்டார்.
பின்னர் எனது சகோதரர் மூலம் பேசி லேப்டாப்-ஐ திரும்பக் கேட்டபோது எங்களை மிரட்டிய விக்ரம் 20 ஆயிரம் பணத்தைப் பெற்றுக்கொண்டே லேப்டாப்-ஐ திருப்பிக் கொடுத்தார். அதேபோல காதலிக்கத் தொடங்கியது முதல் ரகசியமாக திருமணம் செய்து வாழ்ந்து வந்தது வரை என்னிடம் 70 ஆயிரம் ரூபாய்க்கு மேல் பணம் பெற்று விக்ரம் செலவு செய்துள்ளளார்.
இதையடுத்து விக்ரமின் உடைந்த செல்போன் ஒன்றை தனது வீட்டில் விட்டுச் சென்றார். அதை சரிசெய்து அதிலிருந்த ஆபாச புகைப்படங்களையும், பல பெண்களுடன் தொடர்பில் இருந்து அதை வீடியோ எடுத்து வைத்திருப்பதையும் கண்டு தான் அதிர்ச்சியடைந்தேன்.
அவரிடம் திரும்பப் பெற்ற தனது லேப்டாப்பில் இருந்து அவரது மின்னஞ்சல் மூலம் பல பெண்களுடன் எடுத்துக்கொண்ட ஆபாச படங்களை நான் கண்டறிந்தேன். குடும்பச் சூழலில் சுணக்கம் ஏற்பட்டு மன அழுத்தத்தில் இருக்கும் பெண்களை குறிவைத்து முகநூல், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் தொடர்புகொண்டு ஆபாச சேட்டைகளை விக்ரம் செய்துள்ளதும் தெரியவந்தது.
இந்நிலையில் நாளை மறுநாள் வேறொரு பெண்ணுடன் விக்ரமுக்கு திருமணம் நடைபெறவுள்ளது. அந்த திருமணத்தை தடுத்து நிறுத்தி அப்பெண்ணின் வாழ்க்கையை காவல்துறை காப்பாற்ற வேண்டும். விக்ரம் மீது தக்க சட்ட நடவடிக்கை எடுத்து அவரால் இன்னும் எத்தனை பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதை போலீசார் கண்டுபிடிக்க வேண்டும்” என வேண்டுகோள் விடுத்தார்.
ஏற்கெனவே ”வில்லிவாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காததால், தற்போது காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளேன். உரிய நியாயம் கிடைக்காமலும், பாதிக்கப்பட்டோரின் பெயர் வெளியில் வந்துவிடும் என்ற பயமுமே பெரும்பாலான் பெண்கள் புகார் அளிக்க முன்வராததற்கு காரணம். மற்றொரு பெண் விக்ரமால் பாதிக்கப்படாமல் இருக்க தான் முன்வந்து புகாரளித்துள்ளேன். உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என நம்புகிறேன்” எனவும் அவர் தெரிவித்தார்.
செய்தியாளர் ஆர்.சுப்ரமணியன்Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM