ஏர் ஆசியா பங்கினை கையகப்படுத்த CCI ஒப்புதல்.. இனி ஆட்டம் வேற லெவலில்..!

ஏர் இந்தியா நிறுவனத்தினை 68 ஆண்டுகளுக்கு பிறகு நடப்பு ஆண்டின் தொடக்கத்தில் மீண்டும் தன் வசமாக்கியது டாடா குழுமம். ஏர் இந்தியாவின் கையகப்படுத்தலுக்கு பிறகு உலகத்தரம் வாய்ந்த விமான சேவை நிறுவனங்களில் ஒன்றாக மேம்படுத்த உள்ளதாக அறிவித்தது.

அதற்காக நடவடிக்கைகளையும் டாடா குழுமம் எடுத்து வருகின்றது. இதன் சி ஈ ஓ-வில் இருந்து, உயர்மட்ட பணிக்குழு வரையில் பல்வேறு மாற்றங்களையும் செய்து வருகின்றது.

சிசிஐ அனுமதி

இதற்கிடையில் ஏர் இந்தியாவின் விமான சேவையை விரிவாக்கம் செய்யும் பொருட்டு ஏர் இந்திய நிறுவனம், ஏர் ஆசியா நிறுவனத்தின் பங்குகளை கையகப்படுத்த திட்டமிட்டு வருகின்றது. இதற்காக கடந்த ஏப்ரல் மாதம் இந்திய போட்டி ஆணையத்திடம் (CCI) அனுமதி கோரியிருந்தது டாடா குழுமம். இந்த நிலையில் தான் தற்போது இந்திய போட்டி ஆணையம் ஏர் ஆசியாவின் பங்கினை கையகப்படுத்த அனுமதி கொடுத்துள்ளது.

டாடா சன்ஸ் வசம் உள்ள ஏர் ஆசியா பங்கு

டாடா சன்ஸ் வசம் உள்ள ஏர் ஆசியா பங்கு

ஏர் ஏசியா இந்தியா நிறுவனத்தில் டாடா சன்ஸ் பிரைவேட் லிமிடெட் 83.67% பங்குகளை வைத்து உள்ளது, மீதமுள்ள பங்கு மலேசியாவின் ஏர் ஏசியா குழுமத்தின் ஒரு பகுதியாக இருக்கும் ஏர் ஏசியா இன்வெஸ்ட்மென்ட் லிமிடெட் நிறுவனம் வைத்துள்ளது.

இதில் கவனிக்க வேண்டிய விஷயம் ஏர் இந்தியா என்பது மறைமுகமாக டாடா சன்ஸ் பிரைவேட் லிமிடெட்டின் மறைமுக முழு உரிமையுள்ள ஒரு நிறுவனமாகும்.

மலிவான கட்டண சேவை
 

மலிவான கட்டண சேவை

ஏற்கனவே டாடாவின் வசம் இருக்கும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ், ஏர் ஆசியா நிறுவனங்களை கையகப்படுத்தி, அதன் மூலம் ஏர் இந்தியாவினை மீண்டும் மிகப்பெரிய விமான நிறுவனமாக மாற்றுவதுடன், இதன் மூலம் மக்களுக்கு மலிவு விலை கட்டணம் முதல் கார்கோ சேவைகள் என அனைத்தும் வழங்க டாடா குழுமம் திட்டமிட்டுள்ளது.

மீண்டும் நற்பெயரை பெறுவோம்?

மீண்டும் நற்பெயரை பெறுவோம்?

ஏர் இந்தியா நிறுவனத்தினை டாடா சன்ஸ் நிறுவனம் 18,000 கோடி ரூபாய்க்கு நடப்பு ஆண்டின் தொடக்கத்தில் கைபற்றிய நிலையில், ஜேஆர்டி டாடாவின் தலைமையில் ஏர் இந்தியா ஒரு காலத்தில் உலகின் மிகவும் மதிப்புமிக்க நிறுவனங்களில் ஒன்றாக இருந்து வந்தது. ஆரம்ப காலத்தில் இது அனுபவித்த நற்பெயரை மீண்டும் பெறும் வாய்ப்பினை டாடாக்கள் பெறுவார்கள் என ரத்தன் டாடா தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்தது குறிப்பிடத்தக்கது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

CCI approves acquisition of AirAsia india by Air India: check details

CCI has approved Air India to acquire a stake in Air Asia/ஏர் இந்தியாவை விரிவாக்கம் செய்ய திட்டமிடும் டாடா.. ஏர் ஆசியா பங்கினை கையகப்படுத்த CCI ஒப்புதல்..!

Story first published: Tuesday, June 14, 2022, 18:32 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.