தங்களிடம் அணு ஆயுதம் இருப்பதால், ஐரோப்பாவை காணாமல் போகச்செய்துவிடுவோம், அமெரிக்காவை காணாமல் போகச்செய்துவிடுவோம் என மீண்டும் மீண்டும் ரஷ்யா மிரட்டல் விடுத்துக்கொண்டே இருகிறது.
அவ்வகையில், மேற்கத்திய நாடுகளுக்கு இப்போது புதிதாக ஒரு மிரட்டல் விடுத்துள்ளது ரஷ்யா.
உக்ரைனுக்கு அணுஆயுதங்கள் வழங்கினால் ஐரோப்பாவே காணாமல் போய்விடும், அதாவது ஐரோப்பாவையே அழித்துவிடுவோம் என மேற்கத்திய நாடுகளுக்கு மிரட்டல் விடுத்துள்ளது ரஷ்யா.
ரஷ்யாவின் புதிய மிரட்டலுக்குக் காரணம், போலந்தின் முன்னாள் வெளியுறவு அமைச்சரான Radoslaw Sikorski வெளியிட்ட சில கருத்துக்கள்தான்.
அதாவது, புடின் புடாபெஸ்ட் ஒப்பந்தத்தை மீறிவிட்டார் என்றும், அதனால் மேற்கத்திய நாடுகள் உக்ரைனுக்கு அணுஆயுதங்கள் வழங்குவது நியாயமானதுதான் என்றும் கூறி, மீண்டும் ஒரு அணுஆயுத பிரச்சினையை கிளறிவிட்டிருக்கிறார் Sikorski.
Photo Credit: AFP
அவரது இந்த கருத்தால் ஆத்திரமடைந்துள்ள ரஷ்யா, மேற்கத்திய நாடுகள் உக்ரைனுக்கு அணுஆயுதங்கள் வழங்கினால், ஐரோப்பாவையே காணாமல் போகச்செய்துவிடுவோம் என்று மிரட்டல் விடுத்துள்ளது.
பாவம் புடின், அவருக்கு யாராவது ரஷ்யாவின் 23 சதவிகித பரப்பு ஐரோப்பாவில்தான் இருக்கிறது என்பதை நினைவுபடுத்தவேண்டும் போலிருக்கிறது.
உண்மையில், ஐரோப்பாவின் மொத்த நிலப்பரப்பில் 40 சதவிகிதம் ரஷ்யாதான்.
Photo Credit: AP
ஆக, சும்மா ஐரோப்பாவை அழித்து விடுவோம், ஐரோப்பாவை அழித்துவிடுவோம் என்றால், அது, தானே தன் பின்பக்கத்துக்கு தீவைத்துக்கொள்வது போன்றது என்பது புடினுக்குப் புரியவில்லையோ என்னவோ!