ஐதராபாத்: ஒரே நாளில் ரூ.1.50 கோடிக்கு 8 கார்களை வாங்கினார் நடிகர் பவன் கல்யாண்.தெலுங்கு நடிகர் பவன் கல்யாண், ஜன சேனா என்ற அரசியல் கட்சியை நடத்தி வருகிறார். இந்த கட்சியின் சார்பில் வரும் அக்டோபரில் மாநிலம் முழுவதும் பிரசாரம் செய்ய அவர் முடிவு செய்துள்ளார். இதற்காக தன்னுடன் பாதுகாப்புக்கும் பிரசாரத்துக்கும் கட்சி நிர்வாகிகள் வருவதற்கு வசதியாக 8 ஸ்கார்பியோ கார்களை நேற்று முன்தினம் வாங்கியுள்ளார் பவன் கல்யாண். கறுப்பு நிறத்தில் உள்ள இந்த 8 கார்களின் விலை ரூ.1.50 கோடியாகும். ‘சட்டசபை தேர்தலுக்கு முன்னோட்டமாக இந்த பிரசார பயணத்தை பவன் கல்யாண் மேற்கொள்கிறார். இதற்காக இப்போது நடித்து வரும் படங்களின் படப்பிடிப்புகளையும் அவர் தள்ளிப்போட்டிருக்கிறார். அடுத்த ஆண்டு முதல் அவர் எந்த படமும் நடிக்க மாட்டார். கடந்த தேர்தலை விட இந்த தேர்தலில் பவன் கல்யாண் பெரிய சக்தியாக மாறி இருப்பார்’ என அவருக்கு நெருங்கியவர்கள் தெரிவித்தனர்.