இந்திய பங்கு சந்தையின் தந்தை என்று செல்லமாக அழைக்கப்படும் ராகேஷ் ஜுன் ஜுன்வாலா காட்டில் இந்த சவாலான காலக்கட்டத்திலும் பண மழை என்று தான் கூற வேண்டும்.
பொதுவாக பங்கு சந்தையின் ஏற்ற இறக்கத்தில் எல்லாம் சம்பாதிக்கும் வர்த்தகர்கள் தான், தொடர்ந்து பங்கு சந்தையில் முதலீடு செய்து வருகின்றனர்.
அவர்கள் சந்தையில் ஏற்ற இறக்கம் அதிகம், வட்டி அதிகரிக்கலாம், உக்ரைன் ரஷ்யா பிரச்சனை என ஒதுங்கியிருப்பதை காட்டிலும், இந்த மோசமான காலகட்டத்தில் தங்களுக்கு சாதகமான விஷயங்களை பார்க்கின்றனர். இதனால் பிரபல முதலீட்டாளர்களாக மட்டும் அல்லாமல், வெற்றிகரமான முதலீட்டாளர்களாகவும் உள்ளன.
ஒரே நாளில் 6.5 லட்சம் கோடி அவுட்… இரத்தகளரியான பங்கு சந்தை.. முதலீட்டாளர்கள் கண்ணீர்!
என்ன நிறுவனம்?
ஆக இந்த அசாதாரணமான சூழலிம் சம்பாதித்த ராகேஷ் ஜுன் ஜுன்வாலா பற்றித் தான் இந்த பதிவில் பார்க்க இருக்கிறோம்.
ராகேஷ் ஜுன் ஜுன்வாலா ஆதரவுள்ள மெட்ரோ பிராண்ட்ஸ் நிறுவனத்தின் இந்த கடினமான காலக்கட்டத்திலும் கடந்த ஒரு மாதத்தில் நல்ல ஏற்றத்தினை கண்டுள்ளது.
விலையேற்றம்?
மெட்ரோ பிராண்ட்ஸ் நிறுவனத்தின் பங்கு விலையானது கடந்த ஒரு மாதத்தில் 515.05 ரூபாயில் இருந்து, 570.05 ரூபாயாக ஏற்றம் கண்டுள்ளது. இந்த காலகட்டத்தில் மட்டும் ஒரு பங்குக்கு 55 ரூபாய் அல்லது 10.7% லபம் கொடுத்துள்ளது. இது முதலீட்டாளர்களுக்கு கிடைத்த மிக நல்ல வாய்ப்பாகவும் அமைந்துள்ளது.
ராகேஷ் & ரேகா ஜுன் ஜுன்வாலா வசம்?
இந்த மெட்ரோ பிராண்ட்ஸ் நிறுவனத்தில், ராகேஷ் ஜுன் ஜுன்வாலாவின் மனைவி ரேகா ஜுன் ஜுன்வாலா, மூலம் ஒரே மாதத்தில் 215 கோடி ரூபாய் வருவாய் ஈட்டியுள்ளார். இது அவர்களின் போர்ட்போலியோவில் உள்ள முக்கிய பங்குகளில் ஒன்றாக பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டில் பங்கு சந்தைக்குள் நுழைந்த இந்த நிறுவனத்தில் ராகேஷ் ஜுன் ஜுன்வாலா மனைவி பெயரில் முதலீடு செய்துள்ளார்.
இதில் ரேகா ஜுன் ஜுன்வாலா வசம் 3,91,53,600 பங்குகளை வைத்துள்ளார். இது நிறுவனத்தின் மொத்த செலுத்தப்பட்ட மூலதனத்தில் 14.43% ஆகும்.
ஒரு மாதத்தில் எப்படி சாத்தியம்?
இந்த பங்கினை நிபுணர்கள் வாங்க பரிந்துரை செய்துள்ள நிலையில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 515.05 ரூபாயில் இருந்து, 570.05 ரூபாயாக ஏற்றம் கண்டுள்ளது. ராகேஷ் வசம் 3,91,53,600 பங்குகள் உள்ள நிலையில், 3,91,53,600 *55 ரூபாய் என்று கணக்கிட்டால் 215 கோடி ரூபாய் வருவாய் ஒரு மாதத்தில் கிடைத்திருக்கிறது.
எப்போது பங்கு சந்தையில் பட்டியல்?
இந்த நிறுவனம் கடந்த டிசம்பர் 2021ல் பங்கு சந்தைக்குள் நுழைந்தது. அப்போது 1367.51 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை விற்பனை செய்தது. இது பட்டியலிடப்பட்ட முதல் நாளே 15.50% தள்ளுபடி விலையில் பட்டியலிடப்பட்டது. எனினும் இந்த பங்கினில் முதலீட்டாளர்கள் தொடர்ந்து ஆர்வம் காட்டி வருகின்றனர்.
Rakesh jhunjhunwala earns Rs215 crore from this stock with in 1 month
Metro Brands’ share price has risen to Rs 570.05 from Rs 515.05 in the last one month. Through this share Rakesh Jhunjhunwala has earned Rs 215 crore in a single month his wife account.