குரங்கு காய்ச்சல்பாதிப்பு ஆய்வு| Dinamalar

ஜெனீவா:சில ஆப்ரிக்க நாடுகளில் மட்டும் தென்படும், ‘மங்கி பாக்ஸ்’ எனப்படும் குரங்கு காய்ச்சல் நோய், தற்போது பல நாடுகளில் தென்படுகிறது.
கொரோனாவைப் போல, இதுவும் சர்வதேச அளவில் கவலைக்குரிய பெருந்தொற்றாக மாறி வருகிறதா என்பது குறித்து ஆய்வு செய்வதற்காக, உலக சுகாதார அமைப்பு ஜூன் 23ம் தேதி அவசர கூட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளது.அமைப்பின் தலைவர் டெட்ராஸ் அதனோம் கேப்ரியாசிஸ் நேற்று கூறுகையில், ”குரங்கு காய்ச்சல் இதுவரை இல்லாத அளவுக்கு வேகமாக பரவி வருகிறது. இது பொது சுகாதார பிரச்னையாக மாறுகிறதா என்பது குறித்து ஆராயப்பட உள்ளது,” என அவர் தெரிவித்தார்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.