கோயம்புத்தூரில், கோடை விடுமுறைக்கு பின்னர் பள்ளிக்கு சென்ற முதல் நாளிலேயே எட்டாம் வகுப்பு மாணவி உயிரிழந்தார்.
குனியமுத்தூரில் உள்ள நிர்மல் மாதா பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்த சவுமியாவிற்கு மதியம் திடீரென மயக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
பள்ளி நிர்வாகம் உடனடியாக அந்த மாணவியை சங்கீதா மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். சிகிச்சை பலனின்றி சவுமியா உயிரிழந்த நிலையில் அவரது இறப்பில் சந்தேகம் உள்ளதாக உறவினர்கள் புகார் அளித்தனர்.
மாணவி ஏன் மயக்கம் ஏற்பட்டது ? பெற்றோருக்கு எப்போது தெரிவிக்கப்பட்டது ? மாணவிக்கு ஏதேனும் உடல் உபாதைகள் உள்ளனவா ? தனியார் மருத்துவமனையில் சரியான சிகிச்சை அளிக்கப்பட்டதா ? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.