சீனாவில் செயல்பட்டு வரும் ஆப்பிள் நிறுவனத்தின் ஐபேட் தயாரிப்பு நிறுவனம் தற்போது சீனாவில் இருந்து முழுமையாக வெளியேறி வியட்நாமுக்கு மாற இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஐபோன் தயாரிப்பில் முன்னணி நிறுவனமாக கருதப்படும் ஆப்பிள் நிறுவனம் அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு இயங்கி வருகிறது.
இருப்பினும் அந்நிறுவனத்தின் ஐபோன்கள் மற்றும் அதன் உதிரிபாகங்கள் சீனாவில் மட்டுமே உற்பத்தி செய்யப்பட்டு வந்தன.
இந்தியாவின் முதல் டிஸ்ப்ளே உற்பத்தி யூனிட்: ரூ.24,000 கோடியில் எங்கு அமைகிறது தெரியுமா?
சீனாவில் ஆப்பிள்
உலகின் ஒட்டுமொத்த ஐபோன் தேவைகளை சீனாவில் இருந்துதான் பல வருடமாக ஆப்பிள் நிறுவனம் தயாரித்து வந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளாக அமெரிக்கா மற்றும் சீனா இடையே வர்த்தக போர் நடந்து வரும் நிலையில் சீனாவில் இயங்கி வரும் அனைத்து அமெரிக்க நிறுவனங்களையும் வெளியேறுமாறு அமெரிக்க அரசு நிர்ப்பந்தம் கொடுத்து வந்ததாக கூறப்பட்டது.
சீனாவில் இருந்து வெளியேற்றம்
அதுமட்டுமின்றி கடந்த சில நாட்களாக சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகமாகி வருவதால் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்பட்டது. இதனை கருத்தில் கொண்டு சீனாவில் இருந்து வெளியேற முடிவு செய்த ஆப்பிள் நிறுவனம் இந்தியா, வியட்நாம் உள்பட ஒரு சில நாடுகளில் அந்த தொழிற்சாலையை மாற்ற திட்டமிட்டு வந்தது.
இந்தியாவில் ஆப்பிள்
இந்த நிலையில் ஆப்பிள் ஐபேட் நிறுவனத்தை இந்தியாவுக்கு மாற்ற ஆப்பிள் நிறுவனத்தின் உயர் அதிகாரிகள் இந்திய அரசு அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி வந்ததாகவும் சீனாவில் இயங்கி வரும் இந்த நிறுவனம் இந்தியாவில் மாற அதிக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்பட்டது.
40 பில்லியன் டாலர்
இந்தியாவில் இந்நிறுவனம் மாற்றப்பட்டு இருந்தால் அடுத்த 5 ஆண்டுகளில் உலக நாடுகளுக்கு சுமார் 40 பில்லியன் டாலர் மதிப்பிலான ஆப்பிள் நிறுவனத்தின் தயாரிப்புகள் இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் என்றும் அதுமட்டுமின்றி ஏராளமான இந்தியர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்றும் கருதப்பட்டது.
வியட்நாம்
ஆனால் இடையில் என்ன நடந்தது என்றே தெரியவில்லை. திடீரென ஆப்பிள் நிறுவனம் தனது சீனாவிலுள்ள நிறுவனத்தை வியட்நாமுக்கு மாற்ற முடிவு செய்துள்ளது. இதனால் சின்ன நாடான வியட்நாமுக்கு ஜாக்பாட் அடித்துள்ளது.
உழைப்பு
ஆப்பிள் நிறுவனத்தின் இந்த முடிவிற்கு முதன்மை காரணம் ஐபேட் உள்ளிட்ட தயாரிப்புகளை உற்பத்தி செய்வதற்கு தேவையான உழைப்பு மற்றும் பிற வளங்கள் வியட்நாமில் பெறுவது எளிது என்று தான் ஆப்பிள் நிறுவனம் கருதியதாக கூறப்படுகிறது.
போருக்கு ஆதரவு
மேலும் உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்த நிலையில் ரஷ்யாவுக்கு வெளிப்படையாகவே இந்தியா ஆதரவு அளித்ததும் இந்தியாவிற்கு இந்த நிறுவனம் மாற்றப்படாமல் இருப்பதற்கு ஒரு காரணம் என்றும் கூறப்படுகிறது.
Apple to shift some iPad production units from China to Vietnam amid COVID-19 norms
Apple to shift some iPad production units from China to Vietnam amid COVID-19 norms | சீனாவில் இருந்து சின்ன நாட்டுக்கு மாறும் ஆப்பிள் நிறுவனம்: இந்தியா வாய்ப்பை இழந்தது எப்படி?