க. சண்முகவடிவேல், திருச்சி
கோவையில் இருந்து சீரடிக்கு தனியார் ரயில் இன்று இயக்கப்படும் நிலையில் ரயில்வே தொழிலாளர்கள் ஒன்றிய அரசுக்கு எதிராக இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
மத்திய அரசு சுற்றுலா என்ற பெயரில் கோவை – ஷிரடி இடையிலான விரைவு ரயிலையும், ராமாயண யாத்ரா என்கிற பெயரில் டெல்லி – நேபாள் விரைவு ரயிலையும், பாரத் கெளரவ் என்கிற பெயரில் நூற்றுக்கும் மேற்பட்ட விரைவு ரயில்களையும் மத்திய அரசு தனியாருக்கு விற்க முடிவு செய்துள்ளது.
இதனை கண்டித்து ரயில்வே தொழிலாளர்கள் தென்னக ரயில்வே முழுவதும் கருப்பு தினமாக அனுசரித்து இன்று கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக இன்று திருச்சி ரயில்வே பொன்மலை பணிமனை முன்பு எஸ் ஆர் எம் யு துணைப் பொதுச் செயலாளர் வீரசேகரன் தலைமையில் மத்திய அரசை கண்டித்து 200க்கும் மேற்பட்டோர் கண்டன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதனைத்தொடர்ந்து, எஸ்.ஆர்.எம்.யு துணைப் பொதுச் செயலாளர் வீரசேகரன் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில்: பொதுச் சொத்துக்களை, அரசு துறை நிறுவனங்களையும் தனியாருக்கு விற்பனை செய்யும் முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும், சுற்றுலா என்ற பெயரில் ரயில்வேயை தனியாருக்கு தாரைவார்ப்பதை தடுத்து நிறுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்கள் எழுப்பினார்கள்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“