இமாச்சலப் பிரதேசத்தில் வரும் 16, 17 ஆகிய தேதிகளில் முதலாவது தேசிய தலைமைச் செயலாளர்கள் மாநாடு பிரதமர் தலைமையில் நடைபெறவுள்ளது.
மத்திய – மாநில அரசுகளுக்கு இடையேயான ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் விதமாக இந்த மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மூன்று நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டில் மூன்று விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்படவுள்ளது. அதன்படி, தேசிய கல்விக் கொள்கையை நடைமுறைப்படுத்துவது; நகர்ப்புற நிர்வாகம், பயிர் மாற்றம் மற்றும் எண்ணெய் வித்துக்கள், பருப்பு வகை உணவுப்பொருட்களில் தன்னிறைவை அடைதல்; தேசிய கல்விக் கொள்கையின் கீழ் பள்ளி மற்றும் உயர்கல்வி நிலையங்களின் செயல்பாடு ஆகியவை குறித்து இந்த மாநாட்டில் விரிவாக விவாதிக்கப்படும்.
இதுதவிர, மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் சிறப்பாக செயல்படுத்தி வரும் திட்டங்கள் குறித்து மாநாட்டில் எடுத்துரைக்கப்படும். வளர்ச்சியடைந்த மாவட்டங்களின் நிர்வாக செயல்பாடுகள் குறித்தும் இதில் விவாதிக்க திட்டமிடப்பட்டுள்ளது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM