ஜூலை 21ல் வெளியாகிறது மகாவீர்யர்
நிவின்பாலி நடிக்கும் பிரமாண்ட பேண்டசி படம் மகாவீர்யர். அப்ரிட் ஷைன் இயக்கும் இந்த படத்தில் இதில் நிவின் பாலியுடன் ஆசிப் அலி, லால், சித்திக் மற்றும் ஷான்வி ஸ்ரீவஸ்தவா ஆகியோரும் நடித்துள்ளனர். இந்த படம் வருகிற ஜூலை 21ம் தேதி வெளிவரும் என்று நிவின்பாலி, போஸ்டருடன் அறிவித்திருக்கிறார்.
இந்த படம் பிரபல மலையாள எழுத்தாளர் எம்.முகுந்தன் எழுதிய கதையை தழுவி எடுக்கப்பட்டுள்ளது. நிவின்பாலி படங்களில் அதிக பட்ஜெட்டில் தயாராகும் படம் இது என்கிறார்கள். காமெடி கலந்த பேண்டசி கதை. அதோடு ஒரு வழக்கு விவாதத்தையும் கொண்ட படமாக உருவாகி இருக்கிறது. சந்த்ரு செல்வராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார், இஷான சாப்ரா இசை அமைத்துள்ளார்.
நிவின் பாலிக்கு மைக்கேல், லவ் ஆக்ஷன் டிராமா, மூத்தோன், கனகம் காமினி கலகம் போன்ற படங்கள் தொடர் தோல்வி படங்களாக அமைந்தது. இதனால் இந்த படத்தின் வெற்றி அவருக்கு முக்கியமானதாகும். இது தவிர துருமுகம், படவேட்டு படங்களில் நடித்து வருகிறார். தமிழில் ராம் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார்.