கொரோனாவின் தாக்கம் தற்போது கட்டுக்குள் இருக்கும் நிலையில், இந்தியாவில் பல்வேறு ஐடி நிறுவனங்களும் தங்களது ஊழியர்களை அலுவகத்திற்கு திரும்ப அழைக்க தொடங்கியுள்ளன.
நாட்டின் முன்னணி ஐடி நிறுவனங்களான டிசிஎஸ், இன்போசிஸ், ஹெச்சிஎல் டெக் உள்ளிட்ட நிறுவனங்கள் ஊழியர்களுக்கு என்ன அறிவிப்பினை கொடுத்துள்ளன வாருங்கள் பார்க்கலாம்.
சில நிறுவனங்கள் ஊழியர்களை கணிசமாக அலுவலகத்திற்கு வரக் கூறியிருந்தாலும், பெரும்பாலான நிறுவனங்கள் ஹைபிரிட் மாடலிலேயே பணி புரிந்து வருகின்றன.
ஐடி நிறுவனங்கள் எடுத்த திடீர் முடிவு.. ஐடி ஊழியர்கள் ஷாக்..!
டிசிஎஸ்
குறிப்பாக் டாடா கன்சல்டன்ஸி சர்வீசஸ், இன்போசிஸ், ஹெ சி எல் டெக் உள்ளிட்ட நிறுவனங்கள் ஹைபிரிட் மாடலை பின்பற்றி வருவதாக தெரிவுத்துள்ளன. எனினும் அதில் சில அம்சங்களை நடைமுறைப்படுத்த திட்டமிட்டு வருகின்றன.
இதற்கிடையில் தான் சமீபத்தில் டிசிஎஸ் நிறுவனம் தனது ஹைபிரிட் மாடலின் 3Es (Enable, Embrace and Empower) பற்றி விளக்கம் கொடுத்தது குறிப்பிடத்தக்கது.
ஆப்பிள்
உலகின் மிகப்பெரிய டெக்னாலஜி நிறுவனமான ஆப்பிள் தொலைதூரத்தில் இருந்து பணிபுரிவதற்கும், அலுவலகத்தில் இருந்து பணி புரிவதற்கும் இடையில் ஒரு இடை நிலையை கண்டறிய முயற்சி செய்வதாக தெரிவித்துள்ளது. கடந்த சில ஆண்டுகளில் மன ஆரோக்கியம் மிக முக்கியமான ஒன்றாக மாறியுள்ளது. இது பெருந்தொற்றால் மட்டும் அல்ல, அதனை தாண்டிய ஒன்று என ஆப்பிள் நிறுவனத்தின் டிம் குக் சமீபத்திய அறிக்கையில் கூறியிருந்தார்.
டிசிஎஸ்-ன் 3Es
Embrace: வீட்டில் இருந்து வேலை செய்வதில் வீட்டு வேலைகள், குழந்தைகளின் கல்வி உள்ளிட்ட பல கவனச்சிதறல் அதிகம் என நிறுவனம் கூறுகிறது. ஆக வேலை மற்றும் வீட்டிற்கு இடையே தெளிவான இடைவெளி வேண்டும். எப்போதும் ஆன்லைனில் இருக்கும் நிலை இருக்கும்.
Enable: ஒரு ஊழியர்கள் எங்கிருந்து வேண்டுமானாலும் பணிபுரிய தயாரா? நிறுவனங்கள் வழக்கமான வேலை தவிர்த்து கூடுதலானவற்றை செய்ய தயாராக இருக்கும் நிலை உள்ளது. ஒர்க் பிரம் ஹோம் பணியினை இன்னும் எளிமைப்படுத்த சரியான சூழலில் கவனம் செலுத்துகிறீர்களா? என்பதையும் திட்டமிட்டு செயல்படுத்த வேண்டும்.
Empower: நிறுவனங்கள் மற்றும் தனி நபர்கள் எங்கிருந்தும் பணிபுரிய அதிகாரம் பெற வேண்டும். தனிப்பட்ட சூழல் மற்றும் நிறுவன சூழல்கள் சமூக மற்றும் தொழில் நுட்ப தீர்வுகளுடன் இணைக்கப்பட வேண்டும். தனி நபர்கள் மற்றூம் குழுக்கள், நிர்வாகத்திற்கு குறிப்பிட்ட சவால்கள் உள்ளன. அவையும் கருத்தில் கொள்ளப்பட வேண்டும்.
ஆக ஹைபிரிட் மாடல் பணியே என்றாலும் டிசிஎஸ் ஊழியர்கள் Embrace, Enable,Empower என்பதை உறுதி செய்ய வேண்டும், நிறுவனமும் ஊழியர்களுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
இன்போசிஸ் திட்டம்
டிசிஎஸ்-ஐ போலவே இன்போசிஸ் நிறுவனமும் மூன்று கட்ட திட்டத்தினை கொண்டுள்ளது. முதல் கட்டமாக டிசி-களுக்கு (development centres) அருகிலுள்ள மலையக நகரத்தில் உள்ள ஊழியர்கள், வாரத்திற்கு இரண்டு முறை அலுவலகத்திற்கு வரும்படி ஊக்குவிக்கிறது.
இரண்டாவதாக டிசிகளுக்கு வெளியே உள்ள ஊழியர்கள் அடிப்படை மேம்பாட்டு மையங்களுக்கு வர முடியுமா என்பதை பார்க்க, அடுத்த தில மாதங்களில் தயாரிப்புகளை தொடங்குவதற்கு ஊக்குவிக்கும்.
நீண்டகாலத்திற்கு வாடிக்கையாளர்களின் தேவை மற்றும் சூழலை பொறுத்து ஹைபிரிட் மாடலை எதிர்பார்க்கிறோம் என தெரிவித்துள்ளது.
ஹெச் சி எல் திட்டம்
ஹெச் சி எல் நிறுவனம் தற்போது ஹைபிரிட் மாடல் பணியினை தொடர்கிறது. நிறுவனத்தின் முன்னுரிமைகளில் ஒன்று அதன் ஊழியர்கள் மற்றும் அவர்களின் பாதுகாப்பு என்பது முக்கியமான ஒன்றாக பார்க்கிறது. ஆக நாங்கள் அதனை சார்ந்து பணிபுரிந்து வருகின்றோம். அதேசமயம் எங்கள் வாடிக்கையாளர்களுக்கும் தடையில்லா சேவையை உறுதி செய்கிறோம். எனினும் நிலைமை தொடர்ந்து கண்கானித்து வருகின்றோம். தொடர்ந்து ஹைபிரிட் மாடலிலேயே செயல்பட்டும் வருகின்றோம் என தெரிவித்துள்ளது.
TCS, Infosys, HCL tech work from home latest updates: Will Work From Home Continue?
What is the plan of companies including TCS, Infosys, HCL? Will work continue from Home anymore? What are they planning to do.