கேரளாவில் தூக்கக் கலக்கத்தில் இருந்த கார் ஓட்டுநர் தனியார் பேருந்தின் மீது வேகமாக மோதியது குறித்த கண்காணிப்பு கேமரா காட்சிகள் இணையதளத்தில் அதிகம் பகிரப்படுகிறது.
மலப்புரம் அருகே குந்தும்புரம் என்ற பகுதியில் தனியார் பேருந்து ஒன்று பயணிகளை இறக்கி விட சாலையில் நிறுத்தப்பட்டது.
அப்போது, அவ்வழியே வேகமாக வந்த கார் ஒன்று நேராக அந்த பேருந்தின் பின் பகுதியில் மோதியது.
இந்த விபத்தில் காரில் இருந்தவர்கள் காயமின்றி உயிர்த்தப்பினர். ஓட்டுநர் தூக்கக் கலக்கத்தில் விபத்தை ஏற்படுத்தியதாக போலீசார் தெரிவித்துள்ளார்.