அதிமுக ஆட்சியில் தூத்துக்குடியில் நடந்த ஜெயக்குமார், பென்னிக்ஸின் லாக் அப் மரணம் தமிழ் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்திற்கு அப்போது எதிர்க்கட்சியாக இருந்த திமுக கடுமையான கண்டனங்களையும், எதிர்ப்பையும் பதிவு செய்தது.
மேலும் திமுக ஆட்சிக்கு வந்தால் இது போன்ற சம்பவங்கள் நடைபெறாது என வாக்குறுதி அளித்து. ஆட்சி மாறினாலும் காட்சி மாறவில்லை என்பதை நிரூபிக்கும் வகையில் திமுக ஆட்சியிலும் லாக் அப் மரணங்கள் அடுத்தடுத்து நடைபெற்று வருகிறது. திமுக ஆட்சிக்கு வந்த ஒரு வருடத்திற்குள் தஞ்சாவூரை சேர்ந்த சத்தியவான், தர்மபுரியை சேர்ந்த மணிகண்டன், சேலத்தை சேர்ந்த பிரபாகரன், சென்னையை சேர்ந்த விக்னேஷ், திருவண்ணாமலையை சேர்ந்த தங்கமணி, கொடுங்கையூரைச் சேர்ந்த ராஜசேகரன் என வரிசையாக ஆறு லாக் அப் மரணங்கள் நடைபெற்றுள்ளது.
கடந்த ஓராண்டில் ஏழு லாக்கப் மரணங்கள். காவல்துறையில் மேற்கொள்ளப்பட வேண்டிய சீர்திருத்தங்களுக்கு அமைக்கப்பட்ட ஆணையத்தின் நிலை என்ன?
தமிழகத்தில் அரசு இயங்குகிறதா???
— K.Annamalai (@annamalai_k) June 13, 2022
இந்நிலையில், நேற்று சுப்பிரமணியன் என்பவர் காவல் நிலையத்தில் வைத்து காவல்துறையினர் தாக்கியதில் உயிரிழந்துவிட்டதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ட்விட் செய்துள்ளார். இதுகுறித்து அவரது ட்விட்டர் பக்கத்தில், இரண்டு நாட்களில், இரண்டு லாக்கப் மரணங்கள். நேற்று ராஜசேகர், இன்று சிவசுப்பிரமணியன். காவல் நிலையத்திற்குச் சென்றால் உயிருடன் திரும்புவோமா என்ற அச்சத்தை விதைத்துள்ளது முதல் அமைச்சரின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ள காவல்துறை. கடந்த ஓராண்டில் ஏழு லாக்கப் மரணங்கள். காவல்துறையில் மேற்கொள்ளப்பட வேண்டிய சீர்திருத்தங்களுக்கு அமைக்கப்பட்ட ஆணையத்தின் நிலை என்ன? தமிழகத்தில் அரசு இயங்குகிறதா??? என கேள்வி எழுப்பி உள்ளார்.