making paneer with leftover curd; வெயில் காலங்களில் நம் வீட்டில் இன்றியமையாத பொருளாக தயிர் பார்க்கப்படுகிறது. சில தயிர் பிரியர்கள் இருப்பார்கள். தான் சாப்பிடும் எல்லா உணவிலும் தயிர் சேர்த்துகொள்வார்கள். சில நாட்களில் நமது வீடுகளில் தயிர் மிச்சமாகும். இதை என்ன செய்வத் என்று தெரியாமால் நாம் யோசிக்கும் வேளையில் . இனி தயிரை வீணாக்காமல் அதை வைத்து பன்னீர் செய்து பாருங்கள். கடைகளில் பன்னீர் கிடைத்தாலும் வீட்டிலே செய்வது போல் வராது.
ஆழமான அடிப்பகுதி கொண்ட பாத்திரத்தை எடுத்துகொள்ளவும். இதில் 3 கப் பாலை ஊற்றி மிதமான தீயில், பால் கொதிக்கும் பக்குவதிற்கு வரும்வரை காத்திருக்கவும். தற்போது 1 ½ கப் தயிரை சேர்த்துகொண்டு நன்றாக கல்லகவும். சிறிது நேரத்தில் பால் கட்டியாகி வரும். மற்றும் தண்ணீர் விடத்தொடங்கும்.
தற்போது வெள்ளைத்துணியை எடுத்து கொள்ளவும். அதில் கட்டியாகி வரும் பாலை போடவும். தற்போது அதிலிருக்கும் தண்ணீரை புழியவும். தண்ணீரை புழிந்த பிறகு. துணிலேயே கட்டியான பாலை மூடிவிடவும். தற்போது அதன் மீது கனமான பொருளை வைக்கவும்.
இதைத்தொடர்ந்து குளிர்சாதனப்பெட்டியில் 3 முதல் 4 மணிநேரம் வரை வைக்க வேண்டும். தற்போது வெளியே எடுத்து பிடித்த வடிவங்களில் பன்னீரை நறுக்கிகொள்ளவும்.குறிப்பாக சுடு பாலில் தயிரை சேர்க்கும்போது அதை நன்றாக கலக்க வேண்டும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.