சன்டிவியின கேளடி கண்மணி சீரியல் மூலம் பிரபலமானவர் திவ்யா கனேஷ். தொடர்ந்து லட்சுமி வந்தாச்சு. சுமங்கலி உள்ளிட்ட தொடர்களில் நடித்து வந்த இவர். தற்போது விஜய் டிவியின் பாக்கியலட்சுமுி சீரியலில் ஜெனிபர் என்ற ரோலில் நடித்து வருகிறார் இந்த சீரியல் மூலம் பிரபலமான இவருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.
இந்நிலையில் கடந்த 2017-ம் ஆண்டு இவருக்கு பிரபல திரைப்பட நடிகரும் தயாரிப்பாளருமான ஆர்.கே.சுரேஷ்க்கும் திருமணம் முடிவு செய்யப்பட்டுள்ளதாக இருவரும் இணைந்து பத்திரிக்கையாளர் சந்திப்பில் கூறியிருந்தனர். ஆனால் அடுத்த சில தினங்களில் இந்த திருமணம் நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது.
இருவருக்கும் இடையே பெரிய கருத்து வேறுபாடு இருப்பதாகவும், பல விஷயங்களில் இருவருக்கும் ஒத்துபோகவில்லை என்றும் திவ்யா கனேஷ் கூறியிருந்தார். மேலும் அவர் ரொம்ப நல்லவர் ஆனால் எங்களுக்கும் இருக்கும் கருத்து வெறுபாடு திருமணத்திற்கு பிறகு பெரிய பிரச்சினையில் முடியும் என்பதால் இப்போதே திருமணத்தை நிறுத்திவிட்டதாக கூறியிருந்தார்.
இந்த நிகழ்வு அப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில். 3 வருடங்களுக்கு பிறகு ஆர்.கே.சுரேஷ் சினிமா பைனான்சியர் மது என்பரை திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிக்கு தற்போது ஒரு பெண் குழந்தை உள்ள நிலையில். சில மாதங்களுக்கு முன்பு பேட்டி ஒன்றில் பேசிய ஆர்.கே.சுரேஷ், தனக்கு ஏற்கனவே திருமணமாவிட்டதாகவும். கவின் என்று ஒரு மகன் உள்ளதாகவும் கூறியிருந்தார்.
மேலும் தானும் தனது மனைவியும் பிரிந்துவிட்டதாகவும். தனது மகன் கவினை அடிக்கடி சந்தித்து வருவதாகவும் கூறிய அவர், நான் ஒரு சிங்கிள் பேரண்ட் என்பது எனது நண்பர்களுக்கும், திரைத்துறையில் சிலருக்கு மட்டுமே தெரியும். முன்னாள் மனைவியை பிரிந்த பிறகு அவரும் நானும் நண்பர்களாக இருந்து வருகிறோம் என்றும். அவருக்கு ஒரு பிரச்சினை என்றால் முதல் ஆளாக நான் இருப்பபேன் என்றும் கூறியிருந்தார்.
இந்த வீடியோ பதிவு தற்போது வைரலாகி வரும் நிலையில். ஆர்.கே. சுரேஷ் தனக்கு திருமணமாகி ஒரு மகன இருக்கிறான் என்பதை மறைத்ததனால் தான் திருமணத்தை நிறுத்திவிட்டாரா என்று பலரும் கேள்வி எழுப்பி வருகினறனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil