தேசிய முற்போக்கு திராவிட கழக நிறுவனத்தலைவர் விஜயகாந்த் உத்தரவுப்படி, பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் கோயம்பேட்டில் உள்ள தலைமை கழகத்தில் இன்று (14.06.2022) ஒன்றிய, நகர, பேரூர், கழக செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இதில் கட்சி வளர்ச்சி பணிகள் குறித்தும், உட்கட்சி தேர்தல் பணிகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் கழக அவைத்தலைவர் Dr.V.இளங்கோவன், கழக கொள்கைப்பரப்பு செயலாளர் அழகாபுரம்.R.மோகன்ராஜ்,Ex.MLA., கழக துணை செயலாளர்கள் எல்.கே.சுதீஷ், ப.பார்த்தசாரதி,Ex.MLA., ஏ.எஸ்.அக்பர் கலந்துகொண்டனர்.
மேலும் ஒரு அரசியல் செய்தி : தக்கார் ம.சோ.விக்டர் ஆவணப்படம் வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட பெ.மணியரசன், சீமான் சிறப்புரை ஆற்றினார்கள்.
மொழியியல் வரலாற்றுப் பேரறிஞர் தக்கார் ம.சோ.விக்டர் அவர்களைப் பற்றி, பாலா எல்-யா அவர்கள் உருவாக்கிய ஆவணப்படத்தின் வெளியீட்டு விழா இன்று (14-06-2022) நாம் தமிழர் கட்சித் தலைமை அலுவலகத்தில் தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் தலைவர் பெ.மணியரசன், பொதுச்செயலாளர் கி.வெங்கட்ராமன், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் புலவர் ரத்தினவேல் ஆகியோரின் முன்னிலையில் நடைபெற்றது.