சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்த் மருத்துவ பரிசோதனைகளுக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து அக்கட்சி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ”தேமுதிக தலைவர் விஜயகாந்த் வழக்கமாக மேற்கொள்ளும் மருத்துவப் பரிசோதனைக்காக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் இன்று (செவ்வாய்க்கிழமை) அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சிகிச்சை முடிந்து ஓரிரு நாட்களில் அவர் வீடு திரும்புவார்” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.