நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர் தன்னிடம் கேட்கும் கேள்விகள் தொடர்பில் அவர்களை கடுமையாக சாடினார்.
சீமான் பேசுகையில், பட்டப்பகலில் வெட்டி கொலை செய்கிறார்கள், பல இடங்களில் கிலோ கணக்கில் கஞ்சாவை கைப்பற்றுகின்றனர்.
இதெல்லாம் திராவிட மாடலில் வருகிறது.
தொலைக்காட்சி விவாதங்களில் என்ன நடக்கிறது?
நயன்தாரா திருமணம் வியாபாரமா அல்லது திருமணமா என்பது போன்ற விவாதம் நடக்கிறது.
என்னிடமே ஒருவர், அந்த திருமணம் பற்றி என்ன நினைக்கிறீர்கள் என கேட்டார், அதற்கு வேறு எதாவது கேளப்பா என சொன்னேன்.
இவ்வாறு சீமான் பேசினார்.