புதுடில்லி : லஞ்ச வழக்கில் தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகள் இருவர் உட்பட ஐந்து பேரை சி.பி.ஐ., கைது செய்துள்ளது. ஹரியானாவின் குருகிராம் நகரில் உள்ள நிறுவனத்துக்கு சாதகமாக செயல்பட்டு, அந்நிறுவனத்திடம் இருந்து தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகள் லஞ்சம் வாங்கியதாக புகார் எழுந்தது. இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த சி.பி.ஐ., அதிகாரிகள், கவுகாத்தி, பெங்களூரு, குருகிராம், ஷில்லாங், பாட்னா உட்பட 15 நகரங்களில் அதிரடி சோதனை நடத்தி சில முக்கிய ஆவணங்களை கைப்பற்றினர். இதைத் தொடர்ந்து, தேசிய நெடுஞ்சாலை ஆணைய கவுகாத்தி மண்டல கணக்கு அதிகாரி தீபக் தாஸ், இளநிலை கணக்கு அதிகாரி மனோஜ் குமார், ‘ஜி.ஆர். இன்ப்ரா புராஜெக்ட்ஸ்’ நிறுவன நிர்வாக இயக்குனர் சுனில் குமார் மற்றும் அதன் நிர்வாகிகள் பங்கஜ், திலிப் ராஜ்புத் ஆகிய ஐந்து பேரையும் சி.பி.ஐ., அதிகாரிகள் கைது செய்தனர். ஐந்து பேரிடமும் தீவிர விசாரணை நடந்து வருகிறது.
புதுடில்லி : லஞ்ச வழக்கில் தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகள் இருவர் உட்பட ஐந்து பேரை சி.பி.ஐ., கைது செய்துள்ளது.ஹரியானாவின் குருகிராம் நகரில் உள்ள நிறுவனத்துக்கு சாதகமாக செயல்பட்டு,
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.