கோடை விடுமுறைக்கு பின்பு ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரையிலான மாணவ மாணவிகளுக்கு நேற்று முதல் பள்ளிகள் திறக்கப்பட்டது. 2022 – 2023 ஆம் ஆண்டுக்கான நேரடி வகுப்புகள் நேற்று முதல் ஆரம்பமாகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு வழக்கமாக தொடங்கப்படும் ஜூன் மாதத்தில் பள்ளிகள் திறக்கப்பட்டு, நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகிறது.
1-12ம் வகுப்பு வரை முழு பாடங்களையும் நடத்த வேண்டும் என பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. கொரோனா காரணமாக 2 ஆண்டுகளாக பாடங்கள் குறைந்து நடத்தப்பட்ட நிலையில், முழு படங்களை நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது, மாணவர்கள் வகுப்பறைகளுக்கு செல்போனை கொண்டு வரக்கூடாது. மீறியும் எடுத்து வந்து பறிமுதல் செய்யப்பட்டால், செல்போன் மீண்டும் தரப்பட மாட்டாது.
பள்ளிகளில் சேர மாற்று சான்றிதழை கட்டாயப்படுத்தக் கூடாது. மாற்று சான்றிதழ் வழங்க தாமதப்படுத்தவும் கூடாது. பள்ளிகளுக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவுறுத்தியுள்ளார். இல்லம் தேடி கல்வித் திட்டம் தொடர்ந்து 6 மாதங்களுக்கு செயல்படுத்தப்படும். படிப்படியாக இத்திட்டம் நிறுத்தப்படும் என தெரிவித்துள்ளார்.