பீட்சா டெலிவரி செய்யும் பெண்ணை தடியால் சரமாரியாக தாக்கிய 4 பெண்கள்: அதிர்ச்சி வீடியோ

மத்தியப் பிரதேசத்தில் இளம்பெண் ஒருவர் 4 பெண்களால் தாக்கப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

மத்தியப் பிரதேசம் மாநிலம் இந்தூரில் பீட்சா டெலிவரி செய்யும் இளம்பெண் ஒருவர் தங்களை முறைத்துப் பார்த்ததாக கூறி அவரை 4 பெண்கள் சரமாரியாக அடிக்கத் தொடங்கினர்.  இவர்களின் அடியை தாங்க முடியாமல் பீட்சா டெலிவரி பெண் ஊழியர் அருகில் இருந்த வீட்டிற்குள் சென்றார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.
இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர் பீட்சா டெலிவரி செய்யும் பெண்ணிடம் விசாரணை செய்து அவரை அடித்த 4 பெண்கள் யார் என்பது குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.

Came across this @dominos @dominos_india

I hope you’re providing legal assistance to this girl who’s been assaulted on duty. Hope you help her in filing an assault case against these hooligans.

Take action @MPPoliceOnline pic.twitter.com/kVE9O7Sce3
— Deepika Narayan Bhardwaj (@DeepikaBhardwaj) June 13, 2022

இதையும் படிங்களேன்: இந்தியாவிலும் இருந்தது டைனோசர் – புதிய ஆதாரம் வெளியானது: எங்கே தெரியுமா?Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.