பெங்களூரு : கர்நாடகாவில், மாநகர பஸ்களில், பெண்களுக்கான இருக்கைகளில் அமர்ந்திருந்த ஆண் பயணியரிடம், 17 ஆயிரம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, பெங்களூரு மாநகரப் போக்குவரத்துக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:கர்நாடக தலைநகர் பெங்களூரில் இயங்கும் மாநகர பஸ்களில், பெண்களுக்கு என தனி இருக்கைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. ஆனால், பல பஸ்களில், பெண்கள் இருக்கைகளில் ஆண்கள் அமர்ந்து செல்வதாக, ஏராளமான புகார்கள் வந்தன.
இதையடுத்து, மாநகர போக்குவரத்துக் கழக அதிகாரிகள், சமீபத்தில் அதிரடி சோதனை நடத்தினர். இதில், பல்வேறு பஸ்களில், பெண்கள் இருக்கைகளில் அமர்ந்து பயணம் செய்த, 170 ஆண் பயணியரிடம், 17 ஆயிரம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டது.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
பெங்களூரு : கர்நாடகாவில், மாநகர பஸ்களில், பெண்களுக்கான இருக்கைகளில் அமர்ந்திருந்த ஆண் பயணியரிடம், 17 ஆயிரம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து, பெங்களூரு மாநகரப்
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.