கிரிப்டோகரன்சிகளில் முதலீடு செய்தால் குறுகிய காலத்தில் கோடி கோடியாக சம்பாதித்து விடலாம். எந்த கரன்சியில் முதலீடு செய்யலாம். எப்படி செய்யலாம்? மொத்தத்தில் கிரிப்டோகரன்சிகள் அள்ளிக் கொடுக்கலாம் என்று நம்பப்பட்டது.
ஆனால் அப்படி நினைத்தவர்களின் ஆசையில் மண் விழுந்து விட்டது எனலாம். இதுவரையில் சம்பாதித்த பணத்தையெல்லாம், கடந்த சில வாரங்களில் முதலீட்டாளர்கள் இழந்துவிட்டனர் முதலீட்டாளர்கள்.
குறிப்பாக கிரிப்டோகரன்சிகளில் முதன்மை கரன்சிகளில் ஒன்றாகவும், கிரிப்டோகரன்சி முதலீட்டாளார்களின் பெரும் நம்பிக்கையாகவும் இருந்து வரும் பிட்காயின் மதிப்பானது, கிட்டதட்ட 50% சரிவினைக் கண்டுள்ளது. இதனால் முதலீட்டாளர்களின் பெரும் பகுதி முதலீட்டின் நிலை பெரும் கேள்விக் குறியாகியுள்ளது.
இந்தியாவில் இருந்து வேண்டுமென வெளியேறக் காத்திருக்கும் 8000 பேர்.. ஷாக் கொடுக்கும் சர்வே..!
ரிஸ்க் அதிகம்
பல நாடுகளும் கிரிப்டோகரன்சிகளை அதிகாரர்ப்பூர்வ நாணயமாக ஏற்றுக் கொள்ள ஆரம்பித்த இந்த சூழலில், இந்த சரிவானது, முதலீட்டாளர்கள் மத்தியில் பெரும் நம்பிக்கை இழப்பினை ஏற்படுத்தியுள்ளது.
பொதுவாக கிரிப்டோகரன்சிகள் அதிக ஏற்ற இறக்கம் உள்ள ஒரு முதலீடாகவே பார்க்கப்படுகிறது. எந்தளவுக்கு லாபம் கிடைக்குமோ? அந்தளவுக்கு ரிஸ்கும் உள்ளதை முதலீட்டாளர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
பிட்காயின் சரிவு
கடந்த சில அமர்வுகளாகவே தொடர்ந்து சரிவினைக் கண்டு வரும் பிட்காயின் மதிப்பானது, இன்று 21, 000 டாலர்களையும் உடைத்துள்ளது.
தற்போது 4.36 மணி நிலவரப்படி, பிட்காயின் மதிப்பாஞ்சது 6.72% குறைந்து, 22,380.04 டாலராக வர்த்தகமாகி வருகின்றது. இதன் இன்றைய உச்சம் 24,288.70 டாலராகும். இன்றைய குறைந்தபட்ச மதிப்பு 20,834.50 டாலராகும். நடப்பு ஆண்டில் இதுவரையில் பிட்காயின் மதிப்பானது 51.50% சரிவினைக் கண்டுள்ளது.
என்ன காரணம்?
அமெரிக்க டாலரின் மதிப்பானது 2 தசாப்தங்களில் இல்லாதளவுக்கு உச்சம் தொட்டுள்ள நிலையில், இது கிரிப்டோசந்தையில் மிகப்பெரியளவிலான தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையில் கிரிப்டோகரன்சிகளின் சந்தை மதிப்பானது 1 டிரில்லியன் டாலருக்கும் கீழாக காணப்படுகின்றது. இண்று 924.81 பில்லியன் டாலர்களாக காணப்படுகின்றது. இது 7 மாதங்களுக்கு முன்னதாக 7 டிரில்லியன் டாலராக இருந்தது குறிப்பிடத்தக்கது.
இதுவும் ஒரு முக்கிய காரணம்
தொடர்ந்து ரஷ்யா – உக்ரைன் பிரச்சனைக்கு இடையே சர்வதேச பொருளாதாரம் சரிவினைக் காணலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. உலகின் பல நாடுகளும் பணவீக்கத்தின் பிடியில் சிக்கி சீரழிந்து வரும் நிலையில், இது மேற்கொண்டு வட்டி விகிதத்தினை அதிகரிக்க தூண்டலாம், இது வட்டியில்லா, ரிஸ்கான முதலீடுகளில் முதலீடுகளை தடுக்கலாம். ஏற்கனவே இருக்கும் முதலீடுகளை வெளியே எடுக்க தூண்டலாம். இதுவும் கிரிப்டோ சந்தையின் பெரும் சரிவுக்கு ஒரு காரணம் எனலாம்.
மற்ற முக்கிய கரன்சிகளின் நிலவரம்?
எத்தேரியம் – 2.03% வீழ்ச்சி கண்டு, 1172 டாலர்களாக வர்த்தகம், பைனான்ஸ் காயின் மதிப்பு 0.57% சரிவினைக் கண்டு, 220.65 டாலர்களாகவும், கார்டொனோ 10.68% அதிகரித்தும், ஸ்டெல்லர் 3.13% அதிகரித்து, 0.107997 டாலராகவும், போடகடேட் 9.90% அதிகரித்து, 7.19 டாலராகவும், டோஜ்காயின் மதிப்பு 3.41% அதிகரித்து, 0.055525 டாலராகவும், லைட்காயின், யுனிஸ்வாப் என பல காயின்களின் மதிப்பு சற்று அதிகரித்தும் காணப்படுகின்றது.
Cryptocurrency price today: bitcoin hit 21,000 dollar today
The value of Bitcoin, which has been the primary currency among cryptocurrencies and a major source of investor confidence, has plummeted by almost 50%.