போக்குவரத்து நெரிசலை குறைக்க உய்யகொண்டான் கரைகளை அகலப்படுத்த முடிவு – அமைச்சர் கே.என்.நேரு

KN Nehru says Trichy river banks widen for traffic congestion: திருச்சி பஞ்சப்பூர் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து குடமுருட்டி வரை 8 மீட்டர் அகலத்தில் புதிய சாலை அமைத்து மாநகரின் போக்குவரத்து நெரிசலை குறைக்கவிருப்பதாக நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என் நேரு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தெரிவிக்கையில், திருச்சி மாநகர பகுதிகளில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் பஞ்சப்பூரில் அமைய உள்ள ஒருங்கிணைந்த புதிய பேருந்து நிலையத்தில் இருந்து கரூர் ரோடு குடமுருட்டி வரை உய்யகொண்டான், கோரையாறு கரைகளை 8 கிலோ மீட்டர் வரை அகலபடுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

இதையும் படியுங்கள்: தருமபுரியில் தேர் விபத்து; இரண்டு பேர் உயிரிழப்பு

இதன் மூலம் போக்குவரத்து நெரிசல் குறைக்கப்பட்டு சுமார் 2 லட்சம் வாகன ஒட்டிகள் பயன் பெறுவார்கள். இதே போன்று உய்யகொண்டான் – அல்லித்துறை சாலையும் அகலப்படுத்தப்படும்.

திருச்சி மாநகரில் பாதாள சாக்கடை பணிகள் மற்றும் குடிநீர் திட்டப் பணிகள் நடைபெறுவதால் சாலைகள் பழுதடைந்துள்ளது. மழைக்காலத்துக்கு முன்னதாக இப்பணிகள் முடிவடைந்து புதிய தார் சாலைகள் அமைக்கப்படும் என அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.

முன்னதாக திருச்சி குடமுருட்டி, உய்யகொண்டான் குழுமாயி அம்மன் கோவில் பகுதிகளின் கரைகளை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, தமிழ்நாடு நகர்ப்புற நிதி மற்றும் மேம்பாடு நிறுவன கூடுதல் தலைமைச் செயலாளர் சாய்குமார், நகராட்சி நிர்வாக ஆணையர் பொன்னையா உள்ளிட்டோர் ஆய்வு மேற்கொண்டனர்.

இந்த ஆய்வின்போது மாவட்ட ஆட்சித்தலைவர் சு.சிவராசு, மாநகராட்சி மேயர் அன்பழகன், சட்டமன்ற உறுப்பினர்கள் அ.சௌந்தரபாண்டியன், ஸ்டாலின் குமார், தியாகராஜன், பழனியாண்டி, இனிகோ இருதயராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

க.சண்முகவடிவேல்

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.