காவல்துறையினர் மீதான குற்றச்சாட்டுகள் சமீப நாட்களில் அதிகமாக உள்ளதாகவும், இதனை பொறுத்துக்கொள்ள முடியாது என்றும் உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
காவலர் குடியிருப்பில் ஒதுக்கப்பட்ட வீட்டை காலி செய்ய அனுப்பப்பட்ட நோட்டீசை எதிர்த்து காவல்துறையை சேர்ந்த மாணிக்கவேல் என்பவர் வழக்கு தொடர்ந்தார்.
இதன் விசாரணையில், மக்கள் மத்தியில் காவல்துறை மீது ஏற்கனவே பல குற்றச்சாட்டுகள் உள்ளதாக குறிப்பிட்ட நீதிபதி, தங்கள் வீடுகளில் ஆர்டர்லி என்ற பெயரில் காவல்துறையினரை துஷ்பிரயோகம் செய்வது போன்றவை புகார்கள் உள்ளதாக கூறினார்.
போலீசார் அதிகார துஷ்பிரயோகம் செய்ததில் எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து அரசு அறிக்கை தர உத்தரவிட்டு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.