மத்திய அரசின் அக்னிபாத் திட்டத்தின் சிறப்பம்சம் என்ன.. பணியமர்த்தல், சம்பளம், சலுகைகள்?

பாதுகாப்பு படை நியமனங்களில் அக்னிபாத் என்ற புதிய திட்டத்தினை மத்திய அரசு அறிவித்துள்ளது. இது பாதுகாப்பு துறை வீரர்களின் நியமனங்களில் 25% ஒப்பந்த முறையில் பணியமர்த்த கோரியுள்ளது.

இந்த திட்டத்தின் மூலம் இந்திய பாதுகாப்பு துறையில் அதிக இளைஞர்களை கொண்டிருக்கும். இந்த திட்டத்தின் மூலம் ராணுவ வீரர்கள் 4 வருட ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்தப்படுவார்கள். இவர்கள் அக்னி வீர் என்றும் அழைக்கப்படுவர். இவர்களுக்கு சம்பளம், கொடுப்பனவுகள் என அனைத்து சலுகையும் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதெல்லாம் சரி இவர்கள் எப்படி பணியமர்த்தப்படுவார்கள், சம்பளம் எவ்வளவு கிடைக்கும்? மற்ற சலுகைகள் என்ன? மற்ற கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்ன வாருங்கள் பார்க்கலாம்.

இந்த விளம்பரங்களுக்கு தடை.. மத்திய அரசு திடீர் அறிவிப்பு..!

 யாரெல்லாம் விண்ணபிக்கலாம்?

யாரெல்லாம் விண்ணபிக்கலாம்?

மத்திய அரசின் இந்த திட்டத்தின் கீழ் ராணுவம், கப்பல், விமான படை என மூன்று பிரிவுகளிலும் பணியமர்த்தப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. 4 ஆண்டுகால ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்தப்படும் இவர்கள், 17 1/2 வயது முதல் 21 வயதுள்ள விண்ணப்பதாரர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

4 ஆண்டு பணிக்கு பிறகு

4 ஆண்டு பணிக்கு பிறகு

இந்த அக்னி வீரர்களில் 25% பேர் வழக்கமான பணிகளுக்கு (Regular cadre) கீழ் கொண்டு வரப்படுவார்கள்.

இந்த 4 ஆண்டுகால பணிக்கு பிறகு 10 லட்சம் ரூபாய் சேவ நிதி பேக்கேஜ் வழங்கப்படும். இது வட்டியுடன் சேர்த்து 11.71 லட்சம் ரூபாயாக கிடைக்கலாம்.

சம்பளம் எவ்வளவு கிடைக்கும்?
 

சம்பளம் எவ்வளவு கிடைக்கும்?

முதல் ஆண்டில் சம்பளம் – ரூ.30,000, பிடித்தம் போக ரூ.21,000 கிடைக்கும். இதில் அக்னி வீர் கார்ப்பஸ்-க்காக 9000 ரூபாய் செலுத்தப்படும்.

இரண்டாம் ஆண்டில் 33,000 ரூபாய் சம்பளம், கையில் 23,100 ரூபாய் கிடைக்கும். இதில் 9,900 ரூபாய் அக்னிவீர் கார்ப்பஸிக்கு செல்லும்.

3ம் ஆண்டில் 36,500 ரூபாய் சம்பளம் கிடைக்கும். இதில் 25,580 ரூபாய் சம்பளம் கையிலும், 10,950 ரூபாய் அக்னி வீர் கார்ப்பஸ் ஆகவும் செல்லும்.

4வது ஆண்டில் 40,000 ரூபாய் சம்பளம் ஆகும். இதில் கையில் 28,000 ரூபாய் சம்பளமும், 12,000 ரூபாய் அக்னிவீர் கார்ப்பஸ்-க்கும் செல்லும்.

அக்னி வீர் கார்ப்பஸ் (சேவா நிதி பேக்கேஜ்)

அக்னி வீர் கார்ப்பஸ் (சேவா நிதி பேக்கேஜ்)

4 ஆண்டுகளில் இந்த அக்னிவீர் கார்ப்பஸ்-க்கு (சேவா நிதிக்கு) நீங்கள் செலுத்தும் தொகை 5.02 லட்சம் ரூபாயாகும். இதே பங்கினை இந்திய அரசும் செலுத்தும். ஆக இறுதியால 4 ஆண்டுகள் கழித்து, வட்டியுடன் சேர்த்து உங்காளுக்கு 11.71 லட்சம் ரூபாய் கிடைக்கலாம். இந்த சேவா நிதிக்கு வருமான வரியில் இருந்தும் விலக்கு அளிக்கப்படலாம். இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரவில்லை.

இந்த அக்னி வீர்ஸ், 4 வருட பணிக்கு பின்பு ரெகுலர் பணிக்கும் விண்ணப்பிக்கலாம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

AGNIPATH scheme: All you need to know about recruitment, salary & benefits

government has announced a new program called Agnipath in Security Forces appointments. Under the scheme, soldiers will be recruited on a 4-year contract basis. They can get a salary of up to Rs 40,000.

Story first published: Tuesday, June 14, 2022, 15:37 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.