இந்தியாவில் சில்லறை பணவீக்கம் மே மாதம் சரிந்திருந்தாலும் மொத்த விலை பணவீக்கம் அதிகரித்துள்ளது, சந்தை வல்லுனர்கள் படி இந்தியாவின் பணவீக்கம் இன்னும் அதன் உச்சத்தை அடையவில்லை என்று கூறுகின்றனர்.
இந்தியாவிலும் 4 நாட்கள் வேலை, 3 நாட்கள் விடுமுறையா?
இதன் மூலம் இனி வரும் மாதங்களில் பணவீக்கம் 8 சதவீதம் வரையில் உயர்ந்து பெரும் பாதிப்பை மக்களுக்கு ஏற்படுத்தும் என நோமூரா தெரிவித்துள்ளது.
இந்திய நிறுவனங்கள்
இந்திய நிறுவனங்கள் ஏற்கனவே அதிகளவிலான மார்ஜின் பாதிப்பை எதிர்கொண்டு வரும் நிலையில் தனது தயாரிப்புகள் விலையில் பல முறை உயர்த்தியுள்ள வேளையில் உலகளவில் அனைத்து பொருட்களின் விலையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதன் மூலம் மீண்டும் விலை உயரும் அபாயம் உருவாகியுள்ளது.
பெட்ரோல், டீசல் விலை
மத்திய அரசு ஏற்கனவே பணவீக்கம், விலைவாசி உயர்வை குறைக்கும் வகையில் பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை பெரிய அளவில் குறைத்துள்ளது.
கச்சா எண்ணெய் விலை
ஆனால் சர்வதேச சந்தையில் அதிகரித்து வரும் கச்சா எண்ணெய் விலை, சீனாவின் லாக்டவுன் மூலம் ஏற்படும் சப்ளை செயின் பாதிப்பு ஆகியவை பணவீக்கத்தை அடுத்த மாதங்களில் 8 சதவீதத்திற்கு மேலே உயர்த்தும் என நோமூரா தெரிவித்துள்ளது.
சில்லறை பணவீக்கம்
இந்தியாவின் சில்லறை பணவீக்கம் கடந்த ஆண்டை காட்டிலும் மே மாதத்தில் 7.04 சதவீதம் ஆகக் குறைந்துள்ளது. மே மாதத்தில் உணவுப் பொருட்களின் விலைகள் கணிசமாகக் குறைந்ததன் காரணமாக ஏப்ரல் மாதம் 7.79 சதவீதமாக இருந்த பணவீக்கம் 7.04 சதவீதம் ஆகக் குறைந்துள்ளது.
மொத்த விலை பணவீக்கம்
மேலும் இன்று வெளியாகியுள்ள மொத்த விலை பணவீக்கம் மே மாதம் 15.88 சதவீதமாக உள்ளது. இது ஏப்ரல் மாதம் 15.08 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது, கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் 13.11 சதவீதமாக இருந்தது. 14 மாதங்களாக மொத்த விலை பணவீக்கம் இரட்டை இலக்க எண்களில் உள்ளது.
காய்கறிகள் விலை
மக்களின் முக்கிய நுகர்வு பொருளான காய்கறிகளின் சில்லறை பணவீக்கம் ஏப்ரல் மாதத்தில் 15.41 சதவீதமாக இருந்த நிலையில் மே மாதம் 18.26 சதவீதமாக உயர்ந்துள்ளது. இதுவே மொத்த விலை பணவீக்கத்தில் காய்கறிகளின் பணவீக்கம் 23.24 சதவீதத்தில் இருந்து 56.36 சதவீதமாக உயர்ந்துள்ளது.
ஆர்பிஐ மறுமதிப்பீடு
2022-23ஆம் நிதியாண்டுக்கான சில்லறை பணவீக்கம் கணிப்புகளை ஆர்பிஐ மறுமதிப்பீடு செய்துள்ளது. இதன் படி ஜூன் காலாண்டு – 7.5%, செப்டம்பர் காலாண்டு – 7.4%, டிசம்பர் காலாண்டு – 6.2%, மார்ச் காலாண்டு – 5.8% ஆக இருக்கும் எனக் கணித்துள்ளது.
பொருளாதார வளர்ச்சி சக்கரம்
பணவீக்கத்தால் ஏற்படும் விலைவாசி உயர்வு நடுத்தர மக்களின் சேமிப்பை குறைப்பது மட்டும் அல்லாமல் நுகர்வின் அளவும் குறைக்கும். இதனால் சந்தையில் டிமாண்ட் குறைந்து உற்பத்தி குறையும், இதைத் தொடர்ந்து வேலைவாய்ப்பு சரியும் பொருளாதார வளர்ச்சியின் சக்கரத்தின் ஓட்டம் பாதிக்கும்.
Retail inflation may cross 8 percent in upcoming months says nomura
Retail inflation may cross 8 percent in upcoming months says nomura மனதை கல்லாக்கிக்கொள்ளுங்கள்.. இனி ஒவ்வொரு நாளும் இம்சை தான்..!