சென்னை: சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் மயில் சிலை மாயமானது குறித்து 29 பேரிடம் அறநிலையத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். 29 பேரிடம் உண்மை கண்டறியும் விசாரணை நடத்தி உள்ளதாக சென்னை உயர்நிதிமன்றத்தில் அறநிலையத்துறையினர் தகவல் தெரிவித்துள்ளார். மயில் சிலை மாயமானது குறித்து மேலும் 9 பேரிடம் விசாரிக்க வேண்டியுள்ளதால் அவகாசம் வழங்க அறநிலையத்துறை கோரிக்கை வைத்துள்ளது. வழக்கு விசரணையை ஜூன் 28-க்கு ஒத்திவைத்து சென்னை உயர்நிதிமன்றம் உத்தரவுவிட்டுள்ளது.