மரண தண்டனை விதிக்கப்பட்ட பிரித்தானிய வீரர்கள்: கோரிக்கை கருத்தில் கொள்ளப்படும்: ரஷ்யா தகவல்!


உக்ரைனில் சிறைப்பிடிக்கப்பட்ட பிரித்தானிய வீரர்களுக்கு வழங்கப்பட்ட மரண தண்டனை குறித்து மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்ற பிரித்தானிய அரசின் கோரிக்கையை, டான்பாஸ் பிரிவினைவாத தலைவர்கள் நிச்சயமாக கருத்தில் கொள்வார்கள் என ரஷ்யா தெரிவித்துள்ளது.

உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் நடவடிக்கையில், உக்ரைனுக்கு ஆதரவாக போரில் களமிறங்கிய இரண்டு பிரித்தானிய வீரர்கள் ஷான் பின்னர்( 48) மற்றும் ஐடன் அஸ்லின்(28) ஆகியோர் துறைமுக நகரான மரியுபோலில் நடைபெற்ற சண்டையின் போது ரஷ்ய படையினரால் சிறைப்பிடிக்கப்பட்டனர்.

இவ்வாறு ரஷ்ய படைகளால் சிறைப்பிடிக்கப்பட்ட இரண்டு பிரித்தானிய வீரர்களும், அத்துமீறிய தீவிரவாத செயல்களில் ஈடுபட்டதாக ஒப்புக்கொண்டார்கள் என தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், அவர்களுக்கு ரஷ்ய கட்டுபாட்டில் இருக்கும் உக்ரைனின் பிரிவினைவாத பகுதிகளின் நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியது.

மரண தண்டனை விதிக்கப்பட்ட பிரித்தானிய வீரர்கள்: கோரிக்கை கருத்தில் கொள்ளப்படும்: ரஷ்யா தகவல்!PHOTO: EPA

இதற்கு பிரித்தானிய உட்பட பல நாடுகள் கண்டனம் தெரிவித்து, மரண தண்டனையை மறுபரிசீலனை செய்யவேண்டும் என்ற கோரிக்கை முன்வைத்து வருகின்றனர்.

இந்தநிலையில், ரஷ்யாவின் செய்தி தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் பத்திரிக்கையாளர்களுக்கு தொலைபேசி வாயிலாக அளித்த தகவலில், பிரித்தானிய வீரர்களின் மரண தண்டனை முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்ற பிரித்தானிய அரசின் கோரிக்கைகளை உக்ரைன் பிரிவினைவாத தலைவர்கள் ”நிச்சயமாக” கருத்தில் கொள்வார்கள் என தெரிவித்தார்.

மரண தண்டனை விதிக்கப்பட்ட பிரித்தானிய வீரர்கள்: கோரிக்கை கருத்தில் கொள்ளப்படும்: ரஷ்யா தகவல்!]PHOTO: DPA

அத்துடன் இது தொடர்பாக பிரித்தானிய அரசு ரஷ்யாவிடன் எந்தவொரு பேச்சுவார்த்தையிலும் இதுவரை ஈடுபடவில்லை என தெரிவித்தார்.

கூடுதல் செய்திகளுக்கு: உக்ரைனிய மக்களுக்கு வழங்கப்படும் ரஷ்ய பாஸ்போர்ட்கள்: உச்சத்தை தொட்ட புடினின் அத்துமீறல்!

மரண தண்டனை விதிக்கப்பட்ட இரண்டு பிரித்தானிய வீரர்களுடன் மொராக்கோ வீரர் பிராஹிம் சாடூனும் மரண தண்டனையைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.