மஹிந்திரா நிறுவனத்தில் மிகப்பெரிய மாற்றம்.. என்ன நடக்கிறது..!

இந்தியாவின் முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனமான மஹிந்திரா அண்ட் மஹிந்திரா சமீபத்தில் அறிமுகம் செய்த கார்கள் சந்தையில் பெரும் வரவேற்பு பெற்று, தொடர்ந்து புதிய ஆர்டர்களைப் பெற்று வருகிறது.

இந்த நிலையில் மஹிந்திரா அண்ட் மஹிந்திரா நிறுவனம், டாடா மோட்டார்ஸ், ஹூண்டாய் நிறுவனங்களுக்கு இணையாக எலகட்ரிக் கார்களைத் தயாரித்து வர்த்தகச் சந்தையில் புதிய ஆதிக்கத்தைப் பெற திட்டமிட்டு உள்ளது.

இதைச் செய்ய அடிப்படையில் பெரும் சிக்கல் உள்ளதை மஹிந்திரா கண்டுப்படித்து அதைச் சரி செய்யக் களத்தில் இறங்கியுள்ளது.

நீங்கள் ஒரு அரசு ஊழியரா? கோடக் மஹிந்திரா வங்கி உங்களுக்கு தரும் செம சலுகை!

மஹிந்திரா அண்ட் மஹிந்திரா

மஹிந்திரா அண்ட் மஹிந்திரா

மஹிந்திரா அண்ட் மஹிந்திரா நிறுவனம் சமீபத்தில் வெளியிட்ட XUV 700, ஸ்கார்பியோ ஆகியவற்றை எலக்டரிக் வாகனங்களாக அறிமுகம் செய்யத் திட்டமிட்டு உள்ளது. இவ்விரு மாடலின் பெட்ரோல், டீசல் கார்களுக்கே அதிகப்படியான வரவேற்பு கிடைத்த நிலையில் இதை எலக்ட்ரிக் வாகனங்களாக அறிமுகம் செய்துள்ளது மஹிந்திரா அண்ட் மஹிந்திரா நிறுவனம்.

மஹிந்திரா எலக்ட்ரிக் மொபிலிட்டி லிமிடெட்

மஹிந்திரா எலக்ட்ரிக் மொபிலிட்டி லிமிடெட்

இத்திட்டத்தைச் சாதகப்படுத்த மஹிந்திரா அண்ட் மஹிந்திரா நிறுவனத்துடன் இதன் கிளை நிறுவனமான மஹிந்திரா எலக்ட்ரிக் மொபிலிட்டி லிமிடெட் நிறுவனத்தை இணைத்துக்கொள்ள தேசிய நிறுவன சட்ட தீர்பாயத்திடம் அனுமதி கோரியுள்ளது.

EV தான் எதிர்காலம்
 

EV தான் எதிர்காலம்

இந்தியாவில் எலக்ட்ரிக் வாகனம் தான் எதிர்காலம் என 90 சதவீதம் உறுதியான நிலையில் மஹிந்திரா குழுமம் தனது எலக்ட்ரிக் வாகன தயாரிப்பு, டிசைன், இன்ஜினியரிங், பொருட்கள் வாங்குதல், விற்பனை, மார்கெட்டி சேவை ஆகியவை பிரிவில் அதிகப்படியான ஊழியர்கள் தேவை என்ற காரணத்தால் இரு நிறுவனங்களும் இணைக்கப்பட முயற்சிகள் மேற்கொள்ளப்படுகிறது.

எலக்ட்ரிக் வாகன தயாரிப்பு

எலக்ட்ரிக் வாகன தயாரிப்பு

மஹிந்திரா எலக்ட்ரிக் மொபிலிட்டி லிமிடெட் நிறுவனம் எலக்ட்ரிக் வாகன தயாரிப்பில் அதிகளவிலான அனுபவம் இருந்தாலும், மாஸ் ப்ரெடக்ஷனுக்காகத் திறன் இல்லை. இந்த இடத்திற்காகத் தான் மஹிந்திரா அண்ட் மஹிந்திரா உதவுகிறது.

 மஹிந்திரா அண்ட் மஹிந்திரா பங்குகள்

மஹிந்திரா அண்ட் மஹிந்திரா பங்குகள்

இன்றைய வர்த்தகத்தில் மஹிந்திரா அண்ட் மஹிந்திரா குழும பங்குகள் 1.22 சதவீதம் அதிகரித்து 1,017.20 ரூபாயாக உள்ளது. மஹிந்திரா அண்ட் மஹிந்திரா பங்குகள் 2022ஆம் ஆண்டில் மட்டும் சுமார் 22.45 சதவீதம் அதிகரித்துள்ளது, இதேபோல் 30 நாளில் 12.53 சதவீதமாக உள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Mahindra & Mahindra wants its EV arm to merger; waiting for NCLT

Mahindra & Mahindra wants its EV arm to merger; waiting for NCLT மஹிந்திரா நிறுவனத்தில் மிகப்பெரிய மாற்றம்.. என்ன நடக்கிறது..!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.