ராஜஸ்தானின் பார்மர் மாவட்டத்தில் தொடர்ந்து பெய்துவரும் கனமழையால் நகரின் பல்வேறு பகுதிகளிலும் மழை நீர் தேங்கியுள்ளது.
மத்திய பிரதேசம், ஜார்கண்ட், ராஜஸ்தான், உத்தரபிரதேசம் உள்ளிட்ட வட மாநிலங்களில் பரவலாக தென்மேற்கு பருவமழை பெய்துவருகிறது.
ராஜஸ்தானின் பார்மர் மாவட்டத்தில் நேற்று இரவு கொட்டித்தீர்த்த கன மழையால் தாழ்வான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியதுடன், சாலைகளில் மழைநீர் வெள்ளம் போல பெருக்கெடுத்து ஓடியது.