வேன் மோதி நொறுங்கிய டாக்ஸி…பிரித்தானியாவில் பயங்கர விபத்து: 15வயது சிறுவன் கைது!


திருடப்பட்டதாக சந்தேகிக்கப்படும் வேனை ஓட்டிச் சென்று நெடுங்சாலையில் விபத்து ஏற்படுத்தி மூன்று பேர் வரை கொலை செய்த 15 வயது சிறுவனை காவல்துறை கைது செய்துள்ளனர்.

பிரித்தானியவின் M606, Bradford சாலையில் திங்கள் கிழமை இரவு 10:45 மணிக்கு டாக்ஸி ஒன்றும் வேன் ஒன்றும் மோதிக் கொண்டதாக மேற்கு யார்க்ஷயர் காவல்துறைக்கு தகவல் கிடைக்கப்பெற்றது.

இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த பொலிசார் பாதிக்கப்பட்டவர்களை மீட்டு மருத்துவமனைக்கு உடனடியாக அனுப்பி வைத்தனர். மேலும் திருடப்பட்டதாக சந்தேகிக்கப்படும் Ford Transit வேன், சாலையின் தவறான பாதையில் சென்று டாக்ஸி மீது மோதி விபத்தை ஏற்படுத்தியுள்ளது என தெரிவித்தனர்.

வேன் மோதி நொறுங்கிய டாக்ஸி...பிரித்தானியாவில் பயங்கர விபத்து: 15வயது சிறுவன் கைது!Photo: Ben lack-Yappa App

இருப்பினும் இந்த மோதல் விபத்தில் டாக்ஸியில் பயணித்த 28 வயது இளைஞர் மற்றும் 49 வயது ஆண் என இருவர் உயிரிழந்துள்ளனர்.

மேலும் தவறான பக்கம் வாகனத்தை ஓட்டிச் சென்று விபத்தி ஏற்படுத்திய வேனில் பயணித்த 18 வயது மதிக்கதக்க இளைஞர் ஒருவரும் மருத்துவ சிகிச்சைகள் பயனளிக்காமல் செய்வாய் கிழமை உயிரிழந்துள்ளார்.

அத்துடன் தவறான பாதையில் வாகனத்தை ஓட்டி வந்த 15 வயது மதிக்கதக்க சிறுவனும், அதனில் பயணம் செய்த 17 வயது மதிக்கதக்க மற்றொரு சிறுவனும் பலத்த காயங்களுடன் உயிருக்கு ஆபத்து இல்லாத நிலையில் மருத்துவ சிகிச்சை பெற்று வருகின்றனர்.

வேன் மோதி நொறுங்கிய டாக்ஸி...பிரித்தானியாவில் பயங்கர விபத்து: 15வயது சிறுவன் கைது!Photo: Ben lack-Yappa App

சம்பவ இடத்திற்கு வந்த மேற்கு யார்க்ஷயர் காவல்துறை பொலிஸார், சம்பவத்தின் தன்மை கருதி விசாரணையை மேற்கொள்ள பொலிஸ் நடத்தைக்கான சுயாதீன அலுவலகத்திற்கு( IOPC) தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து சம்பவ இடத்தில் விசாரணை நடத்திய IOPC குழுவினர், திருடப்பட்டதாக சந்தேகிக்கப்படும் வேன் காவல்துறை துரத்தியதால் தவறான பக்கம் வரவில்லை மற்றும் அதற்கான ஆதாரங்களும் கிடைக்கவில்லை என தெரிவித்துள்ளது.

கூடுதல் செய்திகளுக்கு: முட்டாள் தனத்தை தவிர்த்து…ஆயுதங்களை கீழே போட்டு சரணடையுங்கள்: இறுதி வாய்ப்பு வழங்கிய ரஷ்யா!

இதுத் தொடர்பாக IOPC-யின் உள்ளூர் அதிகாரி தெரிவித்த தகவலில், இந்த சம்பவம் அனைவருக்கும் பாதிப்பை ஏற்படுத்தி இருக்கும், மற்றும் என்ன நடந்தது என்பதைப் புரிந்துகொள்ள, முழுமையான, சுதந்திரமான விசாரணை இருக்கும் என்று மக்களுக்கு உறுதியளிக்க விரும்புகிறேன் எனத் தெரிவித்துள்ளார். 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.