ஸ்விக்கி நிறுவனத்துக்கு மத்திய அரசு கெடு| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

புதுடில்லி : ‘ஸ்விக்கி, சோமெட்டோ’ உள்ளிட்ட ‘ஆன்லைன் டெலிவரி’ நிறுவனங்கள், வாடிக்கையாளர்களின் குறைகளை தீர்ப்பதற்கான விரிவான அறிக்கையை, 15 நாட்களுக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

மத்திய நுகர்வோர் விவகாரத் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: ஆன்லைன் வாயிலாக உணவு வினியோகம் செய்யும் நிறுவனங்கள், வாடிக்கையாளர்கள் தெரிவிக்கும் குறைகளை தீர்ப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

latest tamil news

இதற்காக தற்போது நடைமுறையில் உள்ள திட்டத்தையும், அதை மேம்படுத்திய புதிய திட்டத்தையும், இன்னும், 15 நாட்களுக்குள் அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.