அன்றாட அரசியல் நிகழ்வுகளுக்கு உடனுக்குட எதிரிவினையாற்றுபவர்கள் நம்முடைய மீம்ஸ் கிரியேட்டர்கள்தான். நகைச்சுவை உணர்வு, நகைச்சுவைப் படம் பார்க்கும் பழக்கம், அரசியல் அறிவு, நாகரிகமான கிண்டலான வார்த்தைகள் இவை இருந்தால் போதும் நீங்களும் நல்ல அரசியல் மீம்ஸ் கிரியேட்டர்தான்.
நாகரிகமான அரசியல் மீம்ஸ்கள், கட்சி பேதங்களைத் தாண்டி கவனம் பெறும். அப்படி, சமூக ஊடகங்களில் இன்று கவனம் பெற்ற நல்ல அரசியல் மீம்ஸ்களை இங்கே தொகுத்து தருகிறோம்.
நெல்லை அண்ணாச்சி என்ற ட்விட்டர் பயனர், “ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளர் பற்றிய எதிர்கட்சிகள் கூட்டத்தில் கம்யூனிஸ்ட் பங்கேற்காது.. என்ற செய்தி குறித்து எல்லோருக்கும் ஒரு வழி … இடும்பனுக்கு தனி வழி…” என்று கம்யூனிஸ்ட் கட்சிகளை மீம்ஸ் மூலம் இடித்துரைத்துள்ளார்.
நெல்லை அண்ணாச்சி மற்றொரு மீம்ஸில், “மோடிஜி யை பாக்கணுமா.?? or…EB office போகணுமா..??? # தோட்டத்து கிணத்துக்கு கரண்ட் connection வேணும்..!!” என்று ஜாலியாக மீம்ஸ் மூலம் கிண்டல் செய்துள்ளார்.
கட்டனூர் சேக் என்ற ட்விட்டர் பயனர், “அண்ணாமலை புகார் கூறிய நிறுவனத்துக்கு டெண்டர் இல்லை என்று மருத்துவத்துறை கூறியிருப்பதற்கு, அண்ணாமலை – இப்டி தோத்துக்கிட்டே இருக்கியேடா..” மீம்ஸ் மூலம் அண்ணாமலைக்கு கவுன்ட்டர் கொடுத்துள்ளார்.
கட்டனூர் சேக் மற்றொரு மீம்ஸில், “அடுத்த 18 மாதங்களில் 10 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு என்று பிரதமர் மோடி அறிவித்த செய்தி குறித்து, சங்கிகள் கூறுவதாக, “நாம தான் ௭ல்லா அரசு நிறுவனங்களயும் வித்துட்டோமே.. பின்ன ௭ப்புடி பத்து லட்சம் பேருக்கு வேலை குடுக்குறது..” என்று கிண்டல் செய்துள்ளார்.
கட்டனூர் சேக் மற்றொரு மீம்ஸில், “அடுத்த 18 மாதங்களில் 10 லட்சம் பேருக்கு வேலை – பிரதமர் உத்தரவு, ௧டந்த ௭ட்டு ஆண்டுகளில் ஜி.. அன்னைக்கு காலைல அஞ்சு மணி இருக்கும் கோழி கொக்கரக்கோனு கூவுச்சு மூமெண்ட்..” என்று கலாய்த்துள்ளார்.
வசந்த் என்ற பெயரில் உள்ள ட்விட்டர் பயனர், “2023 டிசம்பருக்குள் 10 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்க பிரதமர் நரேந்திர மோடி உத்தரவு! என்ற செய்தி குறித்து, வீடு இடிக்கும் வேலையா இருக்குமோ” என்று மீம்ஸ் மூலம் பங்கமாக கலாய்த்துள்ளார். உ.பி.-யில் அரசு முஸ்லிம்களின் வீடுகளை ஜேசிபி வைத்து இடிப்பது குறித்த வசந்த்தின் மீம்ஸ் கவனம் பெற்றுள்ளது.
இதற்கு இடையே, கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச..? என்ற பெயரில் உள்ள ட்விட்டர் பயனர், “சொந்தமா வீடு வாங்க காசு இல்லாத திசைகள், கிழக்கு மேற்கு தெற்கு வடக்கு..” என்று மிடில் கிளாஸ்களை மீம்ஸ் மூலம் சுயபகடி செய்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”