புதுடெல்லி,
நேஷனல் ஹெரால்டு வழக்கு தொடர்பாக ராகுல்காந்தியிடம் அமலாக்கத்துறை நேற்று 9 மணி நேரம் விசாரணை நடத்தியது. இன்றும் விசாரணைக்கு ஆஜராகும் படி அமலாக்கத்துறை கேட்டுக்கொண்டதால், ராகுல் காந்தி இன்று அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜர் ஆனார். ராகுல் காந்தியிடம் இன்று 4 மணி நேரம் விசாரணை நடைபெற்றது. விசாரணையின் போது பல்வேறு கேள்விகளை முன்வைத்து அமலாக்கத்துறை அதிகாரிகள் ராகுல் காந்தியிடம் விசாரணை நடத்தியிருக்கலாம் என்று தெரிகிறது.
இதனிடையே, அமலாக்கத்துறை விசாரணையை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். கட்சி தலைமை அலுவலகத்தில் நடந்த தர்ணா போராட்டத்தில் கேசி வேணுகோபால், ஆதிர் ரஞ்சன் சவுத்ரி உள்ளிட்ட கட்சியின் முக்கிய தலைவர்கள் பங்கேற்றனர். தடை உத்தரவை மீறி போராட்டத்தில் ஈடுபட்டதாக கூறி போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினரை போலீசார் கைது வெவ்வேறு காவல் நிலையங்களுக்கு கொண்டு சென்றனர்.