பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 18-ம் தேதி தொடங்கப்படலாம் என்று ஒரு பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.
குடியரசு தலைவர் பதவிக்கான தேர்தல் முடிவுகள் ஜூலை 21ம் தேதி அறிவிக்கப்பட உள்ளது. துணை ஜனாதிபதி பதவிக்கான தேர்தல் தேதி இன்னும் அறிவிக்கப்படதா நிலையில், பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 18-ம் தேதி தொடங்கப்படலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.
பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை மாதம் 18 முதல் ஆகஸ்ட் 12 ம் தேதி வரை நடக்கலாம் என்ற தகவல் வெளியானது.
வெளியான அந்த தகவலின்படி, பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரை நடத்துவதற்கு ராஜ்நாத் சிங் தலைமையிலான பார்லி விவகார அமைச்சரவை குழு பரிந்துரை செய்துள்ளது.
மொத்தம் 17 நாட்கள் நடக்கும் இந்தக் கூட்டத்தின்போது குடியரசு தலைவர் மற்றும் துணை குடியரசு தலைவர் தேர்தல் நடைபெற உள்ளது.
மேலும், பார்லி குழு பரிசீலனைக்கு அனுப்பப்பட்ட 4 மசோதாக்கள் உள்ளிட்ட பல்வேறு மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது என்று அந்த தகவல் தெரிவிக்கிறது.