Amazon Fire TV Stick Lite Price: வீட்டில் பழைய எல்சிடி அல்லது எல்இடி டிவி இருந்தால், அதனை ஸ்மார்ட் டிவியாக மாற்றலாம். அமேசான் புதிய ஃபயர் டிவி ஸ்டிக் லைட்டை அறிமுகப்படுத்தியுள்ளது. இது இந்தியாவில் புதிய அலெக்சா வாய்ஸ் ரிமோட்டுடன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
நல்ல பழைய டிவியை ஸ்மார்ட் டிவியாக மாற்ற, புதிய டிவியை வாங்கி பணத்தை விரயம் செய்ய வேண்டாம். புதிய ஸ்மார்ட் ஸ்டிக் ரிமோட்டில் பிரபலமான OTT பயன்பாடுகளுக்கான ஹாட் கீ பட்டன்கள் உள்ளன.
இது Fire TV Stick Device பிரிவில் உள்ள இரண்டாவது லைட் வெர்ஷன் கேட்ஜெட்டாகும். இதன் முதல் பதிப்பு செப்டம்பர் 2020 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டது.
JioPhone: வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி… ஜியோ போன் ரீசார்ஜ் விலை உயர்வு!
அமேசான் ஃபையர் டிவி ஸ்டிக் லைட் விலை (Amazon Fire TV Stick Lite Price)
அலெக்சா வாய்ஸ் ரிமோட்டுடன் கூடிய புதிய Fire TV Stick Lite விலை ரூ.3,999 மட்டும் தான். இந்த சாதனம் ஏற்கனவே அமேசான் இந்தியாவின் இணையதளத்தில் கிடைக்கிறது.
புதிய கேட்ஜெட் அறிமுகம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, முந்தைய Fire TV Stick Lite ரூ.3,499 என்ற சலுகை விலையில் விற்பனை செய்யப்படுகிறது. கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், பழைய வெர்ஷன் வாய்ஸ் அசிஸ்டன்ட் பயன்பாடுகளுக்கான ஹாட்கீ பட்டனுடன் வரவில்லை.
அமேசான் ஃபையர் டிவி ஸ்டிக் லைட் அம்சங்கள் (Amazon Fire TV Stick Lite Features)
புதிய Amazon Fire TV Stick Lite ஆனது 8GB சேமிப்பகத்துடன் வருகிறது. இதில் 1.7 Ghz குவாட்கோர் புராசஸர் நிறுவப்பட்டுள்ளது. இந்தச் சாதனம் முழு எச்டி தெளிவுத்திறனை உள்ளடக்கிய ஸ்ட்ரீமிங்கை சேவையை ஆதரிக்கிறது.
இதில் HDMI 1080p அல்லது 720p 60/50 Hz திறன் கொண்ட உயர் வரையறை டிவிகளுடன் வேலை செய்கிறது. புதிய ஃபயர் டிவி ஸ்டிக் லைட் முன்பு இருந்ததைப் போலவே உள்ளது.
Nothing Note 1: நம்ம தமிழ்நாட்டில் தயாராகும் நத்திங் போன் 1 ஸ்மார்ட்போன்!
ஆனால், அலெக்சா வாய்ஸ் ரிமோட் உடன் வருவது தான் இதன் பிரதான அம்சமாகப் பார்க்கப்படுகிறது. அமேசான் மியூசிக், அமேசான் பிரைம் வீடியோ, நெட்பிளிக்ஸ் ஆகியவற்றிற்கான தனி ஹாட்கீ பட்டன்களுடன் புதிய அமேசான் ஃபயர் டிவி ஸ்டிக் வருகிறது.
பயனர்கள் வாய்ஸ் அசிஸ்டன்ட் பட்டன் உதவியுடன் அமேசான் அலெக்சாவை அணுகலாம். அலெக்சா வாய்ஸ் லைவ் ரிமோட் புளூடூத் ஆதரவுடன் வருகிறது. இது, தேவையான கண்டண்டுகளை எளிதாக குரல் மூலம் தேட உதவுகிறது.
செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸ் ‘சமயம் தமிழ்’ பக்கத்தை பின் தொடருங்கள்
புதிய அலெக்சா வாய்ஸ் ரிமோட் லைட் முந்தைய தலைமுறை மாடலை விட 42.5 கிராம் எடை குறைவாக உள்ளது. இதன் எடை 43.4 கிராம் ஆகும்.