சென்னை: அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரத்தில், ஒபிஎஸ் இபிஎஸ் இடையேயான மோதல் தீவிரமடைந்து வரும் நிலையில், ஓபிஎஸ்-க்கு ஆதரவான போஸ்டரை மர்மநபர்கள் கிழித்துள்ளதை கண்டித்து, அவரது ஆதரவாளர்கள் கிரின்வேஸ் சாலையில் சாலைமறியலில் ஈடுபட்டனர். இது பரபரப்பை ஏற்படுத்தியது.
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்களின் ஒற்றை தலைமை தொடர்பான போஸ்டர் கிழிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு கிரீன்வேஸ் சாலையில் உள்ள ஓபிஎஸ் இல்லத்திற்கு அருகே ஆதரவாளர்கள் போராட்டம் நடத்தினர்.
அதிமுக மாவட்டச்செயலாளர்கள் கூட்டம் நேற்று அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இதில், கட்சிக்கு ஒற்றை தலைமை தேவை என பெரும்பாலானோர் வலியுறுத்தியதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறினார். மேலும், மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்று வந்தபோதே, அதிமுக அலுவலகம் எதிராக, ஓபிஎஸ் ஆதரவாளர்கள் கோஷம் எழுப்பி வந்தனர். இது சலசலப்பை ஏற்படுத்தி வந்தது. இதையடுத்து போஸ்டர் யுத்தம் நடைபெற்று வருகிறது.
அதிமுகவின் ஒன்றை தலைமை பொறுப்புக்கு எடப்பாடி பழனிசாமிதான் தேர்வு என்று ஒருபக்கம் அவரது ஆதரவாளர்களும், மறுபக்கம் ஓ.பன்னீர் செல்வம் தான் அதிமுகவுக்கு ஒற்றை தலைமையாக இருக்க வேண்டும் என அவரது ஆதரவாளர்களும் குரல் எழுப்பி வருகின்றனர்.
இந்த நிலையில. அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தை ஆதரித்து சென்னையில் ஒட்டப்ட்டட போஸ்டர் கிழிக்கப்பட்டதாக கூறி, அவரது ஆதரவாளர்கள் போராட்டம் நடத்தினர். கிட்டத்தட்ட 10 நிமிடம் மேலாக மறியல் போராட்டம் நடந்துள்ளது. பின்னர் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுவதாக கூறி தொண்டர்களை கலைந்து செல்ல வேண்டும் என காவல்துறை அறிவுறுத்திதன் பேரில் கலைந்து சென்றனர்.
இதற்கிடையில், அதிமுக ஒன்றை தலைமை குறித்து ஓபிஎஸ், இபிஎஸ் தனித்தனியே ஆலோசனை நடத்தி வருகின்றனர். சென்னை இல்லத்தில் ஓபிஎஸ், முக்கிய நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் நடத்தி வருகிறார்.
அதிமுக பொதுக்குழு, செயற்குழு 23-ஆம் தேதி கூடவுள்ள நிலையில், முன்னாள் அமைச்சர் தளவாய்சுந்தரம், அதிமுகவில் ஒற்றை தலைமை குறித்து ஓபிஎஸ், ஈபிஎஸ் தனித்தனியே ஆலோசனை நடத்தி வருகின்றனர். ஒருவர் தலைமை ஏற்றால், மற்றொருவருக்கு பாதிப்பில்லாத வகையில் சுமூக முடிவெடுக்கப்படும் என்றவர், அதிமுக ஒற்றை தலைமை பேச்சுவார்த்தையில் வெற்றி கிடைக்கும் என்றார்.