சுதந்திர தினம், வெசாக் தினம், பொசன் தினம் போன்ற தினங்களில் ரஞ்சன் ராமநாயக்க விடுதலை செய்யப்படுவார் என அரசாங்கம் கூறியது முழுக்க முழுக்க ஏமாற்று வேலை என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
வெலிக்கடை சிறைச்சாலையில் இன்று (ஜன. 15) காலை ரஞ்சன் ராமநாயக்கவைச் சென்று பார்வையிட்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தனது உயர்கல்வியின் வெற்றியுடன் நாட்டுக்கு வினைத்திறனுடனும் அர்த்தத்துடனும் சேவையாற்றுவதற்கு ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து செயற்படுவேன் என்ற செய்தியை நாட்டுக்கு கூறுமாறு ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்ததாக சஜித் பிரேமதாச கூறினார்.
அரசாங்கத்திடனம் திட்டவட்டமான திட்டம் இல்லை
நாட்டில் ஏற்பட்டுள்ள பாரிய நெருக்கடிகள் குறித்து வாராவாரம் பேசுவதைத் தவிர, நாட்டைக் கட்டியெழுப்புவதற்கான திட்டவட்டமான திட்டம் அரசாங்கத்திடம் இல்லை.
எவ்வாறயினும், அரசாங்கம் பொறுப்பேற்ற போது 24 மணித்தியாலங்களில் பிரச்சினைகள் அனைத்தையும் தீர்த்து வைப்பதாக தெரிவித்ததாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
மக்களுக்கு விளக்கங்கள் தேவையில்லை எனவும், மக்கள் பிரச்சினைகளை தீர்த்து நாட்டை கட்டியெழுப்பவே விரும்புவதாகவும் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச மேலும் தெரிவித்துள்ளார்.