சென்னை: அரசு அதிகாரிகளின் அலட்சியத்தால் தமிழக நீர்நிலைகள் ஆக்கிரமிக்கப்பட்டு தண்ணீர் பஞ்சம் ஏற்படுகிறது என சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி வேதனை தெரிவித்தார். வேலூரில் ஒரு கிராமத்தில் 6 நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே குடிநீர் வழங்கப்படுகிறது. ஆக்கிரமிப்புக்கு எதிராக நடவடிக்கை எடுக்காமல் அரசு அதிகாரிகள் எதற்காக ஊதியம் பெறுகின்றனர்? என அவர் கேள்வி எழுப்பினார்.