அரியலூரில் பிரபல உணவகத்தில் குழி பணியாரத்தில் இரும்பு பின் இருந்ததால் சாப்பிட்டவர் அதிர்ச்சி அடைந்தார்.
அரியலூர் ஜெ.ஜெ.நகரில் வசித்து வருபவர் ராஜலிங்கம். இவர் எருத்துக்காரன்பட்டி 9 வது வார்டு ஊராட்சி மன்ற உறுப்பினராக இருக்கின்றார்.
இந்நிலையில் இவர், அரியலூரில் உள்ள பிரபல உணவகத்தில் குழி பணியாரம் சாப்பிட்டார். அப்போது அதில் மிக மெல்லியதாக இரும்பு கம்பி போன்று இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்து உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார். தகவல் அறிந்து அங்கு வந்த அதிகாரிகள் உணவகத்தில் ஆய்வு மேற்கொண்டனர். பின்னர் உணவகம் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM