ஜெயங்கொண்டம் அருகே விளையாடிக் கொண்டிருந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டணை வழங்கி அரியலூர் மகிளா நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே மேலக்குடியிருப்பை சேர்ந்தவர் பாண்டியன் (44) இவர், கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் 24 ஆம் தேதி ஆடு மேய்க்கும் இடத்தில் விளையாடிக் கொண்டிருந்த 13 வயது சிறுமிக்கு முத்தம் கொடுத்து பாலியல் சீண்டல் செய்துள்ளார்.
இதனையடுத்து சிறுமியின் பெற்றோர் ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதையடுத்து போலீசார் பாண்டியனை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.
இந்த வழக்கு விசாரணை அரியலூர் மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்றது வந்தது. இந்த வழக்கை விசாரித்த மகிளா நீதிமன்ற நீதிபதி ஆனந்தன் பாண்டியனுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM