ஆழ்கடலில் ராட்சத திமிங்கலத்தால் விழுங்கப்பட்டு உயிருடன் மீண்ட மனிதர் – வினோத சம்பவம்!

வாஷிங்டன்,

அமெரிக்காவின் மாசசூசெட்ஸ் பகுதியை சேர்ந்த மைக்கேல் பேக்கார்ட்(56 வயது), ராட்சத திமிங்கலத்தின் வாய்க்குள் 40 வினாடிகள் சிக்கி தவித்து பின்னர் உயிருடன் மீண்டுள்ளார்.

பேக்கார்ட் மற்றும் குழுவினர், ஆழ்கடலில் கடல் நண்டுகள் மற்றும் இறால்களை நீருக்கடியில் சென்று சேகரிக்கும் தொழிலாளி ஆவார். அவர்கள் ஒரு கப்பலில் இருந்து கடலுக்கடியில் குதித்து டைவிங் மூலம் நண்டுகளை அறுவடை செய்வார்கள்.

லோப்ஸ்டர் டைவர்ஸ் பொதுவாக குழுவாக வெளியே செல்கிறார்கள். கப்பலில் இருப்பவர்கள் தங்கள் குழுவினர் நீரிலிருந்து வெளியிடும் காற்று குமிழ்களைப் பின்பற்றி, நீருக்கடியில் மூழ்குபவர்களின் இயக்கங்களைக் கண்காணிக்கிறார்கள்.

வழக்கம்போல அவர்கள் டைவிங் செய்து கொண்டிருந்த போது தான், கடந்த ஆண்டு ஜூன் மாதம் இந்த அதிர்ச்சிகர சம்பவம் நடந்துள்ளது. இது குறித்து அமெரிக்க செய்தி நிறுவனத்திற்கு அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியுள்ளதாவது:-

சம்பவத்தன்று, நான் கடலுக்குள்ளே டைவ் அடித்து ஆனந்தமாக நீந்தி மகிழ சென்றிருந்தேன். நான் கடலுக்கு சென்று தண்ணீரில் இறங்கினேன்,இரண்டு டைவ்கள் செய்தேன். தண்ணீரில் 45 அடி கீழே இருந்தேன்.

பின்னர் மூன்றாவது டைவ் செய்த போது, நான் கீழே இழுக்கப்பட்டேன். உள்ளே இருந்து நான் வெளியேற முயற்சிக்கிறேன். ஆனால், என்னால் மேலே எழும்ப முடியவில்லை. ஏனெனில் அப்போது அந்த திமிங்கலம் என்னை விழுங்கியிருந்தது. ராட்சத திமிங்கலத்தின் வாயில் இருப்பதை நான் உணர்ந்தேன்.

திமிங்கலத்தின் வாய்க்குள் எனது நீச்சல் உடை மற்றும் சுவாசக் கருவியை அணிந்திருந்தேன். அதனால் மூச்சுவிட முடிந்தது.

பின்னர் அந்த இடம் திடீரென்று கருப்பாகிவிட்டது. எனது உடலிலும் அழுத்தத்தை உணர முடிந்தது. அது [திமிங்கலம்] வெறித்தனமாக இருந்தது. நான் இறக்க போவதாக நினைத்தேன். நான் என் குழந்தைகள் மற்றும் என் மனைவியைப் பற்றி நினைத்தேன்.

அதிர்ஷ்டவசமாக, அந்த பாலூட்டி கடலின் மேற்பரப்புக்குச் சென்று தலையை அசைக்க தொடங்கியது. இதனால் நான் அதன் வாயிலிருந்து மேலே பறக்கிறேன். நான், கடவுளே என்று கத்தினேன். திமிங்கலத்தின் வாயில் இருக்கும் போது, ​என்து நுரையீரல் வெடிக்கவில்லை என்பதால் தப்பித்தேன்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

அதன்பின்னர், பேக்கார்ட் அவரது குழுவினரால் தண்ணீரிலிருந்து வெளியேற்றப்பட்டு கரைக்குத் திரும்பினார். அங்கிருந்து அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.